பசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்!

20 தை 2019 ஞாயிறு 12:15 | பார்வைகள் : 12274
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழிகள் இதோ...
1) உணவை விரயமாக்கவேண்டாம்
சிங்கப்பூரில் வீணடிக்கப்படும் உணவின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 40 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 800 மில்லியன் கிலோகிராம் எடைகொண்ட உணவு வீணாக்கப்படுகிறது. அதில் பாதி அளவு வீணாவது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மூலம் தெரியவந்தது.
2) மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தலாம்
உணவு வாங்கும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய கலனைப் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் கலன்களின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். அதன் மூலம் கழிவுகளின் அளவைக் குறைப்பதுடன் சில கடைகளில் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
3) அலுவலகத்திற்குக் காரில் செல்வதைத் தவிர்க்கலாம்
கார்ப் பகிர்வுத் திட்டங்களைப் பயன்படுத்தலாம். அல்லது அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லலாம். நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும்; அதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நீங்கள் பங்காற்றலாம். .
4) பழைய ஆடைகளை மாற்றிய பிறகு புதிய ஆடைகளை வாங்கலாம்
பழைய ஆடைகளை நன்கொடையாகக் கொடுக்கலாம்; அல்லது அவற்றை விற்கலாம். ஆடைகளைத் தூக்கி வீசாமல் அவற்றை மறுபயனீடு செய்யலாம்.
5) காகிதப் பயன்பாட்டைக் குறைக்கலாம்
கடந்த ஆண்டு மட்டும் 1.14 மில்லியன் டன் எடையுள்ள காகிதம், அட்டை ஆகியவற்றாலான கழிவுகள் வீசப்பட்டன. அலுவலகத்திலும் வீட்டிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு மின்னியல் முறையைப் பயன்படுத்தலாம்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1