'அர்த்தம் என்ன?' - இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
30 மார்கழி 2018 ஞாயிறு 16:35 | பார்வைகள் : 8832
இந்த ஆண்டு உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை, பல்வேறு மொழி அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அத்தகைய வார்த்தைகள், இவ்வாண்டினை சிறப்பாக வர்ணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அமைப்புகள் கூறின.
அந்த வகையில், அமெரிக்காவின் அகராதிப் பதிப்பகமான Merriam Webster, 'Justice' என்ற வார்த்தையைத் தெரிவு செய்துள்ளது.
அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில், ஆக அதிகமாகத் தேடப்பட்ட 20 அல்லது 30 வார்த்தைகளில், 'Justice' தொடர்ந்து இடம்பிடித்து வந்ததாக, அது கூறியது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டபோது, அந்த வார்த்தையின் பயன்பாடு 74 விழுக்காடு அதிகரித்தது தெரியவந்தது.
Oxford அகராதிகளின் தெரிவு 'Toxic' என்ற எதிர்மறையான வார்த்தையாக இருந்தது. இந்த ஆண்டு மக்களின் பண்புகள், உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்க அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று Oxford கூறியது.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பு நோக்க, அந்த வார்த்தையின் பயன்பாடு 45 விழுக்காடு அதிகரித்தது.