Paristamil Navigation Paristamil advert login

பிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி?

பிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி?

9 மார்கழி 2018 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 9370


எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

 
பிள்ளை நடனத்தில் சிறந்து விளங்குவாளா அல்லது விளையாட்டுகளில் சிறந்து விளங்குவாளா?
 
பள்ளி முடிந்து பிள்ளையைத் துணைப்பாட நடவடிக்கைகளுக்கு அனுப்புவதா அல்லது நீச்சல் வகுப்புக்கு அனுப்புவதா?
 
மற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எத்தனையோ வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள்.
 
என் பிள்ளை கல்வியில்... வாழ்க்கையில் பின்தங்கிவிடுமா?
 
இப்படி ஒவ்வொரு பெற்றோரினுள்ளும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் இருப்பது இயல்புதான். ஆனால் இதனால் பிள்ளைகள் மனவுளைச்சலுக்கு ஆளாகக்கூடும்.
 
அதைத் தவிர்க்க இந்தக் குறிப்புகளைக் கல்வி அமைச்சு பரிந்துரைக்கிறது:
 
1. மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்
 
ஒவ்வொரு பிள்ளையிடமும் தனித்திறன்கள் இருக்கும்.
 
சிலவற்றைச் செய்ய அவர்கள் சிரமப்படலாம்.
 
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.
 
மாறாக, உங்கள் பிள்ளைகள் இதற்குமுன் எப்படிச் செய்தார்கள் என்பதுடன் ஒப்பிடுங்கள்.
 
அவர்களது வளர்ச்சியைப் பாராட்டுங்கள்.
 
2. வெற்றிகளைக் காட்டிலும் முன்னேற்றங்களைக் கொண்டாடுங்கள்
 
அனைத்துப் பாடங்களிலும் முதல்நிலையில் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சில பெற்றோரிடத்தில் உள்ளது.
 
'A' மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் அது உடனே தோல்விக்குச் சமமில்லை.
 
அப்படி நினைக்கும் பெற்றோர் அவர்களுடைய கருத்தைப் பிள்ளைகளிடம் கூறாவிட்டாலும் பிள்ளைகளால் பெற்றோரின் அதிருப்தியை உணர முடியும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஐரீனா கிட்.
 
இது பிள்ளைகளைப் பாதிக்கக்கூடும்.
 
இதனால் சிறு சிறு முன்னேற்றங்களையும் கொண்டாடச் சொல்லி ஊக்குவிக்கிறார் கிட்.
 
3. பிள்ளைகளின் தேவைகளுக்கேற்ப பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தல்
 
பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளிக்கூடத்தைத் தெரிவுசெய்யும்போது தேர்வு மதிப்பெண்களை மட்டும் கவனத்தில்கொள்ளக்கூடாது.
 
வெவ்வேறு பள்ளிகளின் கலாசாரம் மாறுபடும்.
 
பள்ளிக்குப் பள்ளி திட்டங்கள் மாறுபடும்.
 
உங்கள் பிள்ளையின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பள்ளியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
 
4. பாடங்களினால் மட்டும் பிள்ளைகளுக்கு மனவுளைச்சல் ஏற்படுவதில்லை
 
இப்போதைய பிள்ளைகள் சிறு வயதிலேயே இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
 
இதனால் இணையத் துன்புறுத்தல்களுக்கு அவர்கள் ஆளாகக்கூடிய சாத்தியம் அதிகரிக்கிறது என்கிறார் கிட்.
 
தன்னிடம் உதவி கோரி வரும் சிறுவர்கள் பெரும்பாலும் நண்பர்களின் வன்சொல்லால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
 
இதனால் பெற்றோர் பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுவது அவசியம்.
 
பிள்ளைகளின் வீட்டுப்பாடம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்துவது போதாது.
 
பிள்ளைகளின் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றியும் பெற்றோர் அறிவது முக்கியம்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்