Paristamil Navigation Paristamil advert login

காலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா?

காலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா?

2 மார்கழி 2018 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 8936


ஆண்டிறுதி நெருங்குகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சேர்ந்திருக்கும் பொருட்களில் எவை தேவையானவை, எவை தேவையற்றவை என்று பிரித்துச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள்.
 
அவ்வேளையில் சமையலறையைச் சுத்தம் செய்யத் தொடங்கும்போது அலமாரியின் ஒரு மூலையில் பல நாட்களுக்குமுன் வாங்கிய பதப்படுத்திய உணவுப் பொருட்கள், போத்தல் குளிர்பானங்கள் போன்றவை இருக்கும்.
 
இவற்றை இன்னும் உட்கொள்ளலாமா?
 
உணவு காலாவதியாகும் நாள்
 
பெரும்பாலும் உணவுப் பொருட்களில் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
ஆனால் அவை மூன்று வகைப்படும்:
 
பொருட்கள் விற்பனையாக வேண்டிய நாள் (Sell by)
இந்தத் தேதிக்குள் உணவுப் பொருட்களை விற்று முடித்திருக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காக இந்தத் தேதி குறிப்பிடப்படுகிறது.
 
உதாரணத்திற்கு விற்பனையாக வேண்டிய காலக்கெடுவைத் தாண்டி 5இலிருந்து 7 நாட்கள் வரை பால் கெடாமல் இருக்கும்.
 
பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டிய நாள் (Use by)
சீக்கிரம் கெட்டுப்போகும் உணவிற்குக் குறிப்பிடப்படும் காலஅவகாசம் இது.
 
இந்தத் தேதிக்குப்பின் உணவை உண்பது ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
 
பொருட்கள் சிறந்த நிலையில் இருக்கும் அவகாசம் (Best before)
 
இந்தத் தேதியைக் கடந்தும் உணவை உட்கொள்ளலாம்.
 
ஆனால் அது சிறந்த சுவை, தரத்துடன் இருக்காது.
 
உதாரணத்திற்கு வறுத்த உருளைக்கிழங்கு (potato chips) இந்தத் தேதியைக் கடந்ததும் 'மொறு மொறுவென்று' இருக்காது. ஆனால், அதைச் சாப்பிடுவதனால் உடலுக்குக் கேடு விளையாது.
 
ஒருவேளை சந்தேகம் ஏற்பட்டால் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
காலாவதி தேதியைக் கடந்து எந்தெந்த உணவை உண்ணலாம்? 
 
பெரும்பாலும் காலாவதி தேதியைக் கடந்தும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
 
ஆனால் அவை அடைக்கப்பட்டுள்ள 'டின்'கள் (tin) உப்பிக் கிடந்தால் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
'டின்'களிலிருந்து உணவு அல்லது ஏதாவது திரவம் போல் கசிந்திருந்தாலும் அந்த உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
உணவு கெட்டுப்போனதற்கான தடயம் ஏதுமில்லை என்றால் காலாவதி நாள் கடந்தும் சில நாட்களுக்குப் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.
 
எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அது கெட்டுப் போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துவிட்டால் அதை உட்கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்