கடைசி நேரத்தில் படிப்பது உதவுமா?
18 கார்த்திகை 2018 ஞாயிறு 11:21 | பார்வைகள் : 9706
கடைசி நேரத்தில் படிப்பது, உதவாது என ஆய்வுகள் கூறுகின்றன.
நாளை தேர்வை வைத்துகொண்டு இன்று போதிய ஓய்வெடுக்காமல் படித்தால், படித்த எதுவுமே மனதில் ஆழமாகப் பதியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாம் படிக்கும் தகவல்களை நினைவில் வைத்திருப்பது குறித்து, நாம் மிகையாக நம்பிக்கை வைப்பதுண்டு என ஆய்வுகள் காட்டுகின்றன.
அதே நேரத்தில், நிதானமாக ஈடுபாட்டுடன் படிக்கும் பழக்கத்தைக் குறைத்தே எடைபோடுவதாகவும் கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொள்வது மிகக் குறைவு.
ஏனெனில், வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்ட அனைத்தும் தங்களது நினைவில் ஆழமாகப் பதியும் என அளவுக்கு மீறிய நம்பிக்கை அவர்களுக்கு.
ஆனால் அதில் உண்மையில்லை.
படித்த பாடங்களை மீண்டும் படித்தால்தான் தேவையான நேரத்தில் அதைப் பயன்படுத்த முடியுமாம்.
ஆகையால், கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேரத்தைச் சரியாக ஒதுக்கி, தேர்வு வருவதற்கு முன்னரே படிக்க ஆரம்பித்தால், கடைசி நேரத்தில் மூளைக்குள் தகவல்களைத் திணிப்பதைத் தவிர்க்கலாம்.
மேலும், ஒரு தடவை படித்தால் போதாது. படித்ததை மீண்டும் மீண்டும் படித்தால்தான் அது நமது நினைவில் நிற்கும் என்பதும் ஆய்வில் உறுதியாகி இருக்கிறது.
இறுதியாக, தனக்குத் தானே புதிர் போட்டு சோதித்துப் பார்ப்பதும் சிறந்த வழி என்கிறார்கள் ஆய்வாளர்கள்!