Paristamil Navigation Paristamil advert login

18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட குட்டியின் சடலத்தால் ஆய்வாளர்கள் குழப்பம்!

18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட குட்டியின் சடலத்தால் ஆய்வாளர்கள் குழப்பம்!

1 மார்கழி 2019 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 9229


ரஷ்யாவில் 18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சைபீரிய (Siberia) வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் குட்டியின் சடலம் குளிரில் ஆச்சரியப்படக்கூடிய அளவு பதப்படுத்தப்பட்டுள்ளது.
 
இருப்பினும் அது நாயா ஓநாயா என்பதை நிர்ணயிக்க ஆய்வாளர்கள் சிரமப்படுகின்றனர்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு ஓநாய்களில் சில, நாய்களாகப் பரிணாமம் கொண்டதாகப் பொதுவான கருத்து உள்ளது.
 
இரண்டு பரிணாமங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நாய் வாழ்ந்ததால் அது இரண்டின் அடையாளங்களையும் கொண்டிருப்பதாக நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.
 
ஓநாய்கள் எப்போது நாய்களாகப் பரிணமித்தன என்பதைப் பற்றி ஆராய நாய்க்குட்டியின் சடலம் பெரிதும் துணைபுரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
தற்போது நாய்க்கு 'Dogor' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
 
ரஷ்ய மொழியில் அதற்குப் பொருள் 'நண்பர்'.
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்