உயிர்வாழ சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி கண்டுபிடிப்பு!
27 கார்த்திகை 2019 புதன் 06:15 | பார்வைகள் : 9705
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே உயிர் வாழ் சூழல் உள்ள ஒரே கோளாக பூமி விளங்குகிறது. இருப்பினும் உலகத்தின் ஒரே ஒரு பகுதியில் உயிர்வாழ் சூழலே இல்லாததை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையில் அண்மையில் வெளியான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் உள்ள டல்லோல் புவிவெப்ப, சூடான, உமிழ்நீர், ஹைப்பர் அமில குளங்களில் நுண்ணுயிர் வாழ்க்கைக்கான அடிப்படையே இல்லை என்று தெரியவந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சில எரிமலை பள்ளங்களிலிருந்து விஷவாயுக்கள் வெளியாவதாகவும், தீவிர நீர் வெப்ப செயல்பாடு அரங்கேறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இங்கு வசந்த காலத்தின் போது கூட மிக அதிக அளவாக 45 டிகிரி வெப்பம் நிலவுவதாக கூறுகின்றனர்.