நயாகரா நீர்வீழ்ச்சி அருகே வெளிவந்த 100 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய படகு!
4 கார்த்திகை 2019 திங்கள் 06:09 | பார்வைகள் : 9723
கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படகு ஒன்று நீருக்கு மேலே வந்துள்ளது.
கடந்த 1918 ஆம் ஆண்டு அந்தப் படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் படகினைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.