வெறுங்காலில் நடப்பது நல்லதா? ஆய்வில் வெளியாகிய கண்டுபிடிப்பு
28 ஐப்பசி 2019 திங்கள் 11:33 | பார்வைகள் : 9474
காலணிகளை அணிந்து நடக்கும்போது, நமது பாதம் தரையுடன் கொண்டிருக்கும் தொடர்பு மாறுவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Nature சஞ்சிகையில் அந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில் வெறுங்காலில் நடப்போரும் காலணிகளை அணிந்து நடப்போரும் ஆராயப்பட்டனர்.
ஒவ்வோர் அடியை எடுத்துவைக்கும்போது, ஏற்படும் அழுத்தம் ஆய்வு செய்யப்பட்டது.
வெறுங்காலில் நடப்போருக்கு, நாளடைவில் பாதத்தில் தடித்த தோல் உருவாகிறது. அவர்கள், சரளைக்கல் போன்ற சிறு பொருள்களின்மீது பாதம் படும்போது, குறைவான வலியையே உணர்வர்.
வெறுங்கால்களுக்குத் தடித்த தோலே சிறந்த பாதுகாப்பு என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டது.