8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு!

24 ஐப்பசி 2019 வியாழன் 11:01 | பார்வைகள் : 12567
உலகின் மிகவும் பழமையான முத்தை அபுதாபியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகே அமைந்துள்ள மறாவா என்ற தீவில் தொல்லியல் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வின் போது அவர்களுக்கு ஏராளமான பழங்கால சிற்பங்கள், பீங்கான் பொருட்கள் கிடைத்தன.
\இந்நிலையில் ஆய்வின் போது 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தை கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்தபோது, அது கி.மு. 5800 முதல் கி.மு. 5600க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. இயற்கையாக விளைந்த முத்துக்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே உலகின் மிகவும் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.