உலகிலேயே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட காளை
20 ஐப்பசி 2019 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 9841
உலகிலேயே நீண்ட கொம்புகளை உடைய மாடு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வளர்த்துவரும் காளை ஒன்று மிகப் பெரிய கொம்பினைக் கொண்டுள்ளது.
இதன் ஒரு நுனியில் இருந்து மற்றொரு நுனி வரை 11 அடி ஒன்று புள்ளி 8 அங்குல நீளம் கொண்டது தெரியவந்துள்ளது.
6 வயது கொண்ட இந்தக் காளைக்கு பக்கிள்ஹெட் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்தக் காளையின் கொம்புகள் தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளன.
ஏனெனில் தற்போது பக்கிள்ஹெட்டின் கொம்புகள் குறித்து கின்னஸ் நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக அலபாமா பகுதியைச் சேர்ந்த காளை ஒன்றுக்கு 10 அடி 7 அங்குல நீளம் கொண்ட கொம்புகளே உலக சாதனையாக கருதப்பட்டு வருகிறது. விரைவில் அந்தச் சாதனையை பக்கிள்ஹெட் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.