Paristamil Navigation Paristamil advert login

"புக்கர்" விருது தொடர்பில் சில முக்கியத் தகவல்கள்

16 ஐப்பசி 2019 புதன் 17:12 | பார்வைகள் : 10301


உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் ஆக உயரிய விருது புக்கர் பரிசு. ஆண்டுதோறும் அக்டோபர் 14 ஆம் தேதி புக்கர் பரிசு வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.
 
"புக்கர்" பெயர்க் காரணம்
 
பிரிட்டனில் மளிகைப் பொருள் மொத்த விற்பனையில் கொடிகட்டிப் பறந்தவர் புக்கர் (Booker). அவருடைய ஆதரவோடு 1969 ஆம் ஆண்டு "புக்கர்" பரிசு அறிமுகம் செய்யப்பட்டது.
 
பிரான்சில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருது கோன்கோர்ட்(Goncourt). அதற்கு நிகரான ஒரு விருதை வழங்க நிதியுதவி அளிக்கக் கோரி பிரிட்டிஷ் பதிப்பாளர்கள் புக்கர் நிறுவனத் தலைவர் ஜாக் கேம்பெல்லை நாடினர்.
 
2002 ஆம் ஆண்டு Man குழுமத்தின் நிதி உதவி கிடைக்கப்பெற்றதால், The Man Booker Prize என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
சிலிக்கன் வேலியில் செயல்படும் கோடீஸ்வரரின் அறநிறுவனமான Crankstart Foundation நிதியளிக்க முன்வந்திருப்பதால் இந்த ஆண்டு விருதுக்கு மீண்டும் "புக்கர்" என்ற பழைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
புகழும், மதிப்பும்
 
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லந்தில் வெளியிடப்படும் புனைவுக்கு "புக்கர்" பரிசு வழங்கப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அந்த விருது அறிவிக்கப்படும்.
 
வெற்றியாளருக்கு 65,000 டாலர் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
 
விருதுக்குத் தகுதி பெறும் இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 3,100 டாலர் வழங்கப்படும்.
 
புக்கர் விருது தெரிவு முறை
 
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் கொண்ட ஐவர் குழுவை ஆண்டுதோறும் "புக்கர்" விருதுக்குழு அமைக்கும்.
 
நூற்றுக்கணக்கான நியமனங்களிலிருந்து சலித்து எடுத்து விருதுக்குரிய ஒரு நூலைத் தெரிவு செய்ய சில மாதங்கள் ஆகலாம்.
 
இந்த ஆண்டு 151 நூல்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டன. அவற்றில் 13 புத்தகங்களை மதிப்பிட நடுவர் குழு முடிவெடுத்து. பின்னர் அவற்றிலிருந்து ஆறு புத்தகங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டன.
 
புதிய மொழியாக்க விருது
 
பிரிட்டன் அல்லது அயர்லந்தில் பதிப்பிக்கப்பட்ட புனைவு நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலுக்கும் 2016 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக விருது வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் மே மாதம் அந்த விருது அறிவிக்கப்படும்.
 
மொழியாக்க விருதுக்கான பரிசுத் தொகை ஐம்பதாயிரம் பவுண்ட். புனைவை எழுதியவரும், அதை மொழிமாற்றம் செய்தவரும் அந்தப் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வர்.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்