ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாறு!
25 புரட்டாசி 2019 புதன் 10:21 | பார்வைகள் : 9942
கோட்பாட்டு இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) கணிதத் திறமைகள் கொண்ட ஒரு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர் உருவாக்கிய சூத்திரமான E = mc2 தான் இதுவரை உலகிலேயே மிகச் சிறந்த சமன்பாடாகக் கருதப்படுகிறது. இந்த பார்முலா தான் அணுகுண்டின் அடிப்படையாகும்.
இவை தவிர எலெக்ட்ரான்களின் செயல்பாட்டை விளக்கும் Photoelectric Effect, அணுக்களின் துணைத் துகள்களின் செயல்பாட்டை விளக்கும் Quantum Theory என உலகம் அதுவரை கேள்விப்படாத விஷயங்களைச் சொன்னவர் ஐன்ஸ்டைன். அதே போல அண்ட சராசரங்களின் செயல்பாட்டை விளக்க நியூட்டனின் தத்துவங்கள் போதாது என்ற நிலையில், தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை (special theory of relativity) முன் வைத்து, பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடித் தந்தார்.
போட்டான்கள், ஒளியின் வேகம், பிரபஞ்சத்தின் இயக்கம் என எல்லா வகையான நவீன இயற்பியல் ஆராய்ச்சிகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஐன்ஸ்டைன்.
இவரின் வாழ்கையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையில் காணலாம்.
Albert Einstein's Parents - Hermann and Pauline Einsteinஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மார்ச் 14 ஆம் தேதி, 1879 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உல்ம் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை, ஹேர்மன் ஐன்ஸ்டீன், ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச்.
ஐன்ஸ்டைன் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். ஆல்பர்ட் பேசுவதற்குத் தாமதமாகி, பின் தங்கிய மாணவனாக இருந்து, பள்ளிக்கூடத்தில் மந்த புத்தியுள்ள அமைதிச் சிறுவனாகக் காணப் பட்டான். கனவு காணும் கண்களுடன் எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாதவனாய் ஒதுங்கி இருந்தான்.
5பெரியவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் வண்ணம், ஆல்பர்ட் எதையும் ஆமை வேகத்தில்தான் செய்து முடித்தான்! மகன் டைஸ்லெக்ஸியா [Dyslexia] நோயில், எழுதப் பேச முடியாமல் பத்து வயது வரை இருந்ததாகத் தாய் கருதினாள். 'எந்த உத்தியோகம் அவனுக்கு உகந்தது ' என்று தகப்பனார் ஒரு சமயம் கேட்டதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர், 'ஆல்பர்ட் எதிலும் உருப்பட்டு சாதிக்கப் போவதில்லை' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாராம்!
சிறுவனாக இருந்தபோது ஐன்ஸ்டைன் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார்.
ஐந்து வயதில் ஒரு சமயம் நோயில் விழுந்து படுக்கையில் கிடந்த போது, தகப்பனார் காந்தத் திசை காட்டும் [Magnetic Compass] பைக்கருவி ஒன்றை ஆல்பர்ட்டுக்குக் கொடுத்தார். ஐன்ஸ்டைன்க்கு அது ஒரு விந்தைக் கருவியாகவும், சிந்தனைத் தூண்டுவதாகவும் இருந்தது. தட்டை எவ்விதம் சுற்றித் திருப்பி னாலும், காந்த ஊசி எப்போதும் ஒரே திசையைக் காட்டியது.
அவ்வாறு நிகழ்வதற்குச் சூழ்வெளியில் ஏதோ ஒன்று ஊசியை இயக்கி வருவதாக ஆல்பர்ட் நினைத்தான். அது என்னவாக இருக்கும்? சூழ்வெளி எப்போதும் காலி வெற்றிடம் என்றல்லவா கருதப் படுகிறது! அந்த வயதில் சிறுவன் சிந்தனை தூண்டப் பட்டு அண்ட வெளியை நோக்கிச் சென்றது! அதுவே ஆல்பர்ட் பின்னால் அண்ட வெளி, காந்த சக்தி, புவீ ஈர்ப்பு பற்றி ஆழ்ந்து சிந்திக்க அடிகோலி இருக்கலாம்! பின்னர் பள்ளியில் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்புகள் கூறுகிறது.
Albert Einstein at Age 14சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.
அந்த வயதிலேயே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவற்றின் மீது அவருக்கு ஆர்வமும், பகுத்தறியக்கூடிய திறனும் இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தன. இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.
1898ல் பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பல்துறை தொழிற்கல்லூரி.
மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு நாடற்றவரானார். 1900, சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 21-02-1901இல் இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார்.
படிப்பு முடிந்ததும் இவருக்குக் கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் மூலம், 1902 ல், சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.
Albert Einstein's family - Edouard, Mileva, Hans Albert06-01-1903 இல் ஐன்ஸ்டின், தான் காதலித்த மிலேவா மாரிக் கை அவர் மணந்தார். அவர்களுக்கு (Hans Albert Einstein, Eduard). இரண்டு குழந்தைகளும் பிறந்தது.
1905 இல் ஐன்ஸ்டைன் ஜூரிச் பல்கலைக் கழகத்தில் பெளதிக விஞ்ஞானத்தில் Ph.D. பட்டதாரி ஆனார். கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E=mc2. எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க சக்தியை கொண்டிருக்கும் என்று கூறினார். விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.
1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.
பிள்ளைகள் பெற்ற மிலேவா போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. உலக மேதையான ஐன்ஸ்டின் உள்ளத்தைப்புரிந்து கொள்ள விரும்பாத அவரது மனைவி 14-02-1919ல் ஐன்ஸ்டினை விட்டுப் பிரிந்தார்.
Elsa Einsteinதனக்கு ஒரு துணை வேண்டி, தம் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு நடந்துகின்ற ஒரு பெண்ணை ஐன்ஸ்டின் தேடினார். அவருடை உறவுக்காரப் பெண்ணான எல்சா (Elsa Löwenthal)என்பவளை ஐன்ஸ்டின் மணந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே எல்சா மறைந்தார்.
தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலேவா பிரிவும், தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்ஸ்டினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்குத் தடைக் கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். இனி எஞ்சிய காலத்தைத் தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்ஸ்டின் உறுதி பூண்டார்.
ஜெர்மனியின் பெர்லின் அறிவியல் அகாடமியின் பேராசிரியராக இருந்தபோதே அணு ஆராய்ச்சிகளை இவர் ஆரம்பித்திருந்தார்.
ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நாட்டுக்கே போகவில்லை. அமெரிக்காவுக்கு வந்தவர் அங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார்.
1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
இரண்டாவது உலகப் போர் ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் தெரிந்த நேரம். அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt) அந்த விஞ்ஞானியை அழைத்து, “அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும். நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால் அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
ரூஸ்வெல்ட் சொன்னதைக் கேட்ட ஐன்ஸ்டைன் சிரித்தார். அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூஸ்வெல்ட் விழித்தார்.
“அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூஸ்வெல்டுக்குப் பதில் கூறிவிட்டு வெளியேறினார்.
ஆனால் அடுத்த நாள் ரூஸ்வெல்ட் ஐன்ஸ்டைனிடம், "ஹிட்லரிடம் அணுகுண்டு கிடைத்தால் அவர் உலக மக்களை அழித்து விடுவார். ஜெர்மனி அணு குண்டு கண்டுபிடிபதற்குள் நாம் அதை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் உதவ வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.
சிறிது நேரம் யோசித்து பின்னர் ஐன்ஸ்டைன் உதவி செய்கிறேன் என்று வாக்களித்தார். அமெரிக்காவும் அணு குண்டு ஆராய்ச்சியை தொடங்கியது.
ரூஸ்வெல்ட் வேறொரு விஞ்ஞானியை வைத்து அணுகுண்டைத் தயாரித்தார். யோசனை சொன்னதோடு, ஐன்ஸ்டைன் “பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்” டின் அடிப்படையில் அணுகுண்டு தயாரிக்க உதவியும் செய்தார். ஆனாலும், அணு குண்டு பயன்படுத்தவதை இவர் எதிர்க்கவும் செய்தார்.
இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்தபோது அந்த அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா வீசியது. இந்தக் கோரச் சம்பவம் 1945ஆம் ஆண்டு நடந்தது.
ஹிரோஷிமா, நாசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும் கூட அந்த நகரம் முழுதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர்ப்புகள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அந்த அணுகுண்டு ஜப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்குப் பலகாலம் ஆயிற்று.
விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஐன்ஸ்டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது. 1921-ஆம் ஆண்டு ஐன்ஸ்டினை நோபல் பரிசு தேடி வந்தது.
உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த ஐன்ஸ்டின், தமது சொந்த நாடான ஜெர்மனியிலேயே வாழ்வது என்று முடிவு செய்து, அங்கேயே தங்கினார். ஆனால் அப்போது ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிட்லர், யூதர்களையும், யூத அறிவாளிகளையும் இழிவாக நடத்துவதைக் கண்டு வருந்தினார்.
இனி நாம் வாழ்வதற்கு ஜெர்மனி ஏற்ற இடமல்ல என்று ஐன்ஸ்டின் முடிவு செய்தார். அதன்பின் அவர் வாழ்க்கை அமெரிக்காவில் தொடர்ந்தது. அங்குள்ள ‘பிரின்ஸ்டன்’ என்ற பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டின் இயற்பியல்/ பெளதிகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
சுமார் இருபது ஆண்டுகள் மனைவி துணைவியின்றி வாழ்ந்த ஐன்ஸ்டின், 1955 ஏப்ரல் 18-ம் நாள் அமெரிக்காவில் மறைந்தார்.
உலகின் மாபெரும் ஜீனியஸாகக் கருதப்படும் இவர், 1955ம் ஆண்டு இறந்தபோது அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதை அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதையடுத்து இவரது மூளை தனியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மூளை மிக அதிகமான மடிப்புகளையும், மிக சிக்கலான தோற்றத்தையும் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.
மனித மூளை என்பது சராசரியாக 1,230 கிராம் (ஒரு கிலோ 200 கிராம்) எடை கொண்டது. இதன் முக்கிய பாகங்கள் பிராண்டல் லோப், பெரைடல் லோப், ஆக்ஸிபிடல் லோப், டெம்போரல் லோப், லிம்பிக் லோப், இன்சுலார் கார்டெக்ஸ் ஆகியவை. பிராண்டல் லோப் என்பது மூளையின் முன் பகுதி. இது தான் நமது சிந்தனைகளின் கூடாரம்.
இதில் பிரச்சனையோ, சேதமோ ஏற்பட்டால் நமது சிந்தனைகள் சிதரும். பெரைடல் லோப் பகுதியின் முக்கிய வேலை தொடு உணர்வுகளை ஒருங்கிணைப்பது. இது பிராண்டல் லோபின் பின் பக்கம் உள்ளது. ஆக்ஸிபிடல் லோப் என்பது பின் பக்க மூளையில் இருப்பது. நமக்கு பார்வைத் திறனைத் தருவது இது தான்.
டெம்போரல் லோப் என்பது மூளையின் கீழ் பகுதி. இது வாசனை, கேட்கும் திறன், முக பாவனைகளைத் தருவது. லிம்பிக் லோப் மூளையின் மத்தியப் பகுகியில் உள்ளது. இது தான் நமக்கு நினைவாற்றல், குணநலன்களைத் தருவது. இன்சுலார் கார்டெக்ஸ் மூளையின் போர்வை போன்றது. இது தான் வலி உள்ளிட்டவற்றை உணர வைப்பது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மூளை 240 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடம் ஆராய்ச்சிக்காக தரப்பட்டது. இதைப் பிரித்தவர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சி வல்லுனரான டாக்டர் தாமஸ் ஹார்வி.
இந்த 240 பாகங்களும் மூளை நரம்பியல் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பிரித்துத் தரப்பட்டு அதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இந்த மூளைப் பகுதிகளில் பல காணாமல் போய்விட்டன.
ஆனாலும் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து சமீபத்தில் ஐன்ஸ்டைன் மூளை குறித்து ஒரு சில முடிவுகளுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள். குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மனித பரிணாமம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டீன் பால்க் தலைமையிலான குழு, ஐன்ஸ்டைன் மூளையின் சில பகுதிகளில் மிக அதிகமான மடிப்புகளும், பள்ளங்களும் (grooves) மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
85 பிற மூளைகளுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐன்ஸ்டைன் மூளையின் எடை என்னவோ மற்றவர்களைப் போலவே சராசரி எடை கொண்டதாகவே இருந்துள்ளது. ஆனால், அதன் மடிப்புகள், முகடுகளின் (ridges) எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்துள்ளது. மேலும் ஒரு விஷயத்தை மிகக் கூர்மையாக ஆராயும் திறனையும் முன்யோசனையையும் தரும் prefrontal cortex பகுதி ஐன்ஸ்டைன் மூளையில் கொஞ்சம் பெரிதாகவே இருந்ததும் உறுதியாகியுள்ளது.
ஐன்ஸ்டைன் மறைந்தது 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி. அப்போது அவருக்கு வயது 76. ஆனால், அவரது இயற்பியல் கோட்பாடுகளுக்கு ஏது சாவு?