கட்டட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள்!
22 புரட்டாசி 2019 ஞாயிறு 04:22 | பார்வைகள் : 9259
ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது.
இந்தக் கல் கட்டடங்ளில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியபோது அங்கு பாதி உடைந்த நிலையில் வாள் ஒன்று மண்ணுக்குள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வாளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ரோமானியர்கள் அல்லது மற்றவர்கள் படையெடுப்பின் போது பயன்பட்ட வாளாக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வாள் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.