'சொறிவதில் சுகம். ஏன்?' கண்டுபிடித்தவருக்கு கிடைத்த விருது
15 புரட்டாசி 2019 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 9010
வித்தியாசமான விஞ்ஞானச் சாதனைகளை அங்கீகரிக்கின்றன Ig நொபெல் விருதுகள்.
'முதலில் சிரிக்கவைக்கும், பின்னர் சிந்திக்க வைக்கும்' கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் இதன்கீழ் அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு விருதைப் பெற்ற சில கண்டுபிடிப்புகள்:
சொறிவதில் சுகம் இருக்கிறதே...ஏன்?
எங்கு சொறிவதில் அதிக சுகம்?
5 வயதுப் பிள்ளைக்குச் சராசரியாக நாளொன்றுக்கு எவ்வளவு எச்சில் வழிகிறது?
இத்தாலியில் தயாரித்து, உட்கொள்ளப்படும் பிஸ்ஸா புற்றுநோயிலிருந்து காக்கிறதா?
அணையாடை (Diaper) மாற்றும் இயந்திரம்
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இப்படிப்பட்ட 10 விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்குப் பரிசு என்னவென்று தெரியுமா?
10 டிரில்லியன் டாலர்!!
ஆம்! 10 டிரில்லியன் ஸிம்பாப்வே டாலர்.
(1 சிங்கப்பூர் வெள்ளி 440 ஸிம்பாப்வே டாலர் - நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்)
வெற்றியாளர்கள் 60 விநாடிகளுக்கு ஓர் உரை நிகழ்த்தவேண்டும். ஒரு விநாடி கூடிவிட்டாலும், 8 வயதுச் சிறுமி மேடைக்கு வந்து "தயவுசெய்து நிறுத்துங்கள்! என்னால் தாங்க முடியவில்லை" என்கிறார்.
"வித்தியாசமாக இருக்கவேண்டும்; கற்பனைத் திறன் கொண்டவர்களை அங்கீகரிக்கவேண்டும்; விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மக்களுக்கு ஆர்வமூட்டவேண்டும்" இதுவே விருதுகளின் நோக்கம்.