அண்டார்டிகாவை பச்சை நிறமாக மாற்றிய அரோரா ஒளி!
8 புரட்டாசி 2019 ஞாயிறு 03:58 | பார்வைகள் : 9693
அண்டார்டிகாவில் உள்ள சீன ஆராய்ச்சி மையத்தின் மேல்பகுதியில் இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா (aurora) வெளிச்சம் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.
சுழன்று கொண்டு மிதந்த பச்சை நிற மேகங்களின் ஒளி, பனி போர்த்திய நிலப்பரப்பில் ரம்மியமாக எதிரொலித்தது. அண்டார்டிகாவில் உள்ள சீனாவின் ஜாங்ஷான் (Zhongshan) ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த அரியவகை நிகழ்வை காட்சிப்படுத்தியுள்ளது.
அரோரா என்பது அண்டார்டிக் மற்றும் ஆர்டிக்கின் உயர் அட்சரேகை பகுதிகளில் இயற்கையாக தோன்றக்கூடிய ஒரு ஒளி.
சூரியனிடம் இருந்து வரும் ஒளியில் உள்ள சூடான துகள்கள் பூமியின் காந்த மண்டலத்தில் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. சில சமயம் இந்த இடையூறுகளின் வலிமை சூரிய ஒளியில் உள்ள துகள்களின் பாதையை மாற்றும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் துகள்கள் திருப்பி அனுப்பப்பட்டு வளிமண்டலத்தின் மேலடுக்கில் படிந்து வெவ்வெறு வண்ணங்களில் இதுபோன்ற ஒளியை உமிழ்கின்றன.