3.8 மில்லியன் வயதுகொண்ட மண்டையோடு கண்டுபிடிப்பு!!
4 புரட்டாசி 2019 புதன் 06:14 | பார்வைகள் : 9835
எத்தியோப்பியாவில் 3.8 மில்லியன் வயதுகொண்ட மண்டையோட்டின் அனைத்துப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 3.8 மில்லியன் முதல் 4.2 மில்லியன் வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த மனித இனங்கள் ஆஸ்ட்ரலொபிதெகஸ் அனாமென்சிஸ் (Australopithecus anamensis) என அழைக்கப்படும்.
இந்தக் காலக்கட்டத்துக்குச் சொந்தமான மண்டையோட்டைக்
கண்டுபிடிப்பது இதுவே முதல்முறை. ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வைக் கடந்த 15 ஆண்டுகளாக எத்தியோப்பியாவில் உள்ள அஃபார் (Afar) மாநிலத்தில் மேற்கொண்டனர்.
அந்த மண்டையோட்டின் முழு விவரங்களை ஆராய்ந்தபோது அது ஒரு ஆணுடையது எனத் தெரியவந்துள்ளது.
மண்டையோட்டின் படிவங்களை மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆடவர் வாழ்ந்த சுற்றுப்புறத்தையும் பருவநிலை மாற்றத்தையும் புரிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.