விமானத்தின் அதிர்வுகளால் அச்சமடைபவர்களுக்கு...!!
27 ஆவணி 2019 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 9610
விமானப் பயணங்களின் போது ஏற்படும் அதிர்வுகள் அனைவரையும் சற்றுக் கதிகலங்கச் செய்யும். விமானமே அதிரும் போது மனத்தை எப்படி நிலைப்படுத்துவது என்று நாம் நினைக்கலாம்.
இப்போதுள்ள விமானங்கள் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாக விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.
இருப்பினும் பயணத்தின்போது சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் பதற்றம் சற்றுக் குறையலாம்...
1) பகல் நேரத்தில் புறப்படும் விமானச் சேவைகளைத் தெரிவு செய்யலாம். இரவில் களைப்பாக இருக்கும் என்பதால் பதற்றம் அதிகரிக்கும்; பகல் நேரப் பயணத்தில் அதிர்வுகள் ஏற்படும் போது உங்களுக்குப் பதற்றம் வெகுவாக அதிகரிக்காது.
2) இருக்கை வாரை எப்போதும் அணிந்திருந்தால் விமானத்தில் அதிர்வுகள் ஏற்படும் போது, இருக்கையிலிருந்து தூக்கியெறியப்படும் உணர்வு குறையும்.
3) அதிர்வுகள் ஏற்படும் போது, அசம்பாவிதம் நடக்கும் என்று உடனடியாக மனம் நினைக்கத் தான் செய்யும். ஆனால் அதற்கு பதிலாக மனத்தைத் திசைதிருப்புவது நன்று.
4) பதற்றம் சில சமயங்களில் அறியாமையால் ஏற்படுகிறது. அடுத்த முறை விமானத்தில் ஏறும் முன் விமானம் எப்படி இயங்குகிறது என்று சற்று இணையத்தில் படித்துப் பார்க்கலாம். அதிர்வுகள் ஏற்படும் போது அச்சம் சற்றுக் குறையும்.