மனிதனின் உயரத்தில் பாதி இருந்த கிளிகள்! ஆராய்ச்சியில் வெளியாகிய அபூர்வ தகவல்

9 ஆவணி 2019 வெள்ளி 15:07 | பார்வைகள் : 14054
நியூசிலாந்தில் 1 கோடியே 90 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிளிகள் மனிதனின் உயரத்தில் பாதி இருந்ததாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது.
நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. குறித்த கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. 7 கிலோ எடைக்கு மேல் இந்தப் பறவை இருந்திருக்கிறது.
“இதைவிட பெரிய கிளிகள் இந்த உலகத்தில் இல்லை,” என்கிறார் இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய அவுஸ்திரேலிய ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக தொல்லுயிரியல் பேராசிரியர் ட்ரிவோர் வொர்தி.
11 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பறவையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ட்ரிவோர் வொர்தி, “ஓர் ஆய்வின் போது தற்செயலாக எனது மாணவர் ஒருவர் இந்த கிளியின் எலும்புகளைக் கண்டுபிடித்தார்.” என கூறியுள்ளார்.
இந்தப் பறவையின் அலகு மிகப் பெரிதாக இருந்திருக்கிறது என்கிறார் NSW பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்.
இந்தக் கிளிகள் நன்கு உணவு உட்கொண்டுள்ளன. ஏன் மற்ற கிளிகளைக் கூட இவை உணவாக உண்டிருக்கலாம் என்கிறார் அவர்.
இவ்வளவு பெரிய பறவைகளைக் கண்டுபிடிப்பது நியூசிலாந்தில் புதிதல்ல. அழிந்து போன பறவை இனமான மோவாவின் வாழ்விடமாக ஒரு காலத்தில் நியூசிலாந்து இருந்திருக்கிறது.
இந்தப் பறவையின் உயரம் ஏறத்தாழ 3.6 மீட்டர். அதாவது 11 அடி 8 அங்குலம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1