முன்னொரு காலத்தில் சைவமாகத் திரிந்த முதலைகள்! ஆய்வில் வெளியாகிய தகவல்
29 ஆனி 2019 சனி 02:31 | பார்வைகள் : 9210
முன்னொரு காலத்தில் முதலைகள் சைவம் உண்ணும் விலங்குகளாய் சுற்றித் திரிந்தன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அழிந்துபோன 16 வகை உயிரினங்களின் பற்களைச் சோதனையிட்டதில், முற்காலத்தில் முதலைகள் சற்று சாதுவாக இருந்ததாக நம்பப்படுகிறது.
சில வகை முதலைகள் மாமிசம் சாப்பிட்டதாகவும், இன்னும் சில வகை முதலைகள் சைவ உணவுகள் மட்டுமே உட்கொண்டதாகவும், இன்னும் இரண்டு வகை உணவுகளை அவை உண்டதாய் கூறப்பட்டது.
பழங்காலத்தில் சில முதலைகள் நாய், பூனை போன்ற மிருகங்களைப் போன்ற அளவிலேயே இருந்தன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலைகள் ஏன் அவற்றின் உணவுப் பழக்கங்களை விரிவுபடுத்தின என்றும் பின்னர் என்ன காரணத்துக்காக அவை மாமிசத்தை மட்டுமே உண்ண தொடங்கின என்பதை அறிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.