Paristamil Navigation Paristamil advert login

சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

16 ஆனி 2019 ஞாயிறு 07:26 | பார்வைகள் : 2994


ஆசிய உணவு வகைகளில் சோயா சாஸ் பெரிய இடத்தை வகிக்கிறது. உணவில் சுவையையோ நிறத்தையோ கூட்டுவதற்கு இது, சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
 
போத்தல்களில் தயாராகக் கிடைக்கும் சோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது?
 
தெரிந்துகொண்டால் ஆச்சர்யப்படுவீர்கள் !
 
- சோயா மொச்சை, கோதுமை, உப்பு-இவை சாஸின் மூலப்பொருள்கள்
 
- பொறுக்கி எடுக்கப்பட்ட சோயா மொச்சையும் கோதுமையும் நன்கு அரைக்கப்பட்டுக் கலக்கப்படுகின்றன. அந்தக் கலவை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது.
 
- பின்னர் அந்தக் கலவை 27 டிகிரி செல்ஸியஸுக்குக் குளிர்விக்கப்படுகிறது. கலவை, பதமான நிலைக்கு வந்ததும் அதில் ஒருவகைப் பூஞ்சனம் கலக்கப்படுகிறது.
 
- மூன்று நாள்களுக்குக் கலவை, துளையுள்ள கலன்களில் நொதிக்க வைக்கப்படுகிறது. இதுவே சோயா சாஸுக்கு நிறத்தைத் தருகிறது.
 
- கோஜி எனப்படும் இந்தக் கலவையுடன், தண்ணீர், உப்பு, ஈஸ்ட், Lactic acid-ஆகியவை சேர்க்கப்படுகின்றன. கலவை மீண்டும் 6 மாதங்களுக்கு நொதிக்க வைக்கப்படுகிறது.
 
- ஆறு மாதங்களுக்குப் பின் அந்தக் கலவை வடிகட்டப்படும். அதில் கிடைக்கும் சக்கையிலிருந்து சோயா சாஸ் பிரிக்கப்பட்டுக் கொதிக்கவைக்கப்படும். பின்னர் அது போத்தல்களில் அடைக்கப்படுகிறது.
 
- பாரம்பரிய சோயா சாஸ் தயாரிப்பு முறை நிறைவுபெற சுமார் மூவாண்டுகள் வரை பிடிக்கும். நவீன இயந்திரங்களின் உதவியால், அந்த நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்