Paristamil Navigation Paristamil advert login

லியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு?

லியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு?

4 ஆனி 2019 செவ்வாய் 17:40 | பார்வைகள் : 2547


பிரபல ஓவியக் கலைஞர் லியார்னாடோ டாவின்சி(Leonardo da Vinci) காலமாகி 500 ஆண்டுகளாகிவிட்டன.
 
இன்னும் அவரைப் பற்றிய புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
 
டாவின்சி ADHD எனப்படும் கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அண்மை ஆய்வு கூறுகிறது.
 
அவரது புகழ்பெற்ற படைப்புகள் சிலவற்றை முடிக்க டாவின்சி சிரமப்பட்டதற்கு அதுவே காரணமாயிருந்திருக்கக்கூடும்.
 
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் கூட முற்றுப்பெறாத ஒன்றுதான்.
 
ADHD குறைபாடுகொண்டோர் பொறுமையின்றிக் காணப்பட்டாலும், சிலரிடம் குறிப்பிடத்தகுந்த அளவில் புத்தாக்கத் திறன் கூடுதலாக இருக்கும்.
 
டாவின்சியின் செயல்களில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதற்கும், அவரது கலை-அறிவியல் மேன்மைக்கும், ADHDக்கும் தொடர்பிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
அந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோரைப் போன்றே டாவின்சியும் குறைந்த நேரமே தூங்கும் பழக்கமுடையவர்; பல நேரங்களில் அவர் இரவு பகலாகத் தொடர்ந்து வேலை செய்வாராம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்