தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

26 ஆவணி 2017 சனி 13:33 | பார்வைகள் : 14634
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது.
இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.
பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.
பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1