3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் தோன்றியதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு!
8 ஆனி 2017 வியாழன் 08:59 | பார்வைகள் : 9973
2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியதாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள ஆதிமனிதனின் மண்டை ஓடு ஆராய்ச்சியாளர்களின் கூற்றை பொய்யாக்கியுள்ளது.
மனித இனம் முதன்முதலில் ஆப்பிரிக்க பகுதிகளில் தோன்றியதாக கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், மனித இனத்தின் முன்னோடியாக கருதப்படும் ஹோமோ செப்பியன்ஸ் எனப்படும் ஆதிமனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி படிப்படியாக மனித இனம் உருவானதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் கிழக்கு ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிமனிதனின் மண்டை ஓடுகளை சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் அவை சுமார் 3 லட்சம் ஆண்டுகள், அதாவது ஆராய்ச்சியாளர்கள் முன்பு குறிப்பிட்டிருந்ததை விட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து வந்த ஆதிமனிதனுடையது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மனித மூளை படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும், இதுவரை நினைத்ததை போல வேகமாக அவை வளர்ச்சியடையவில்லை என்பதையும் இந்த கண்டுபிடிப்பின் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த பரிணாம வளர்ச்சியின் வேகத்தின்படி விரைவில் மனித இனத்தின் மூளை வளர்ச்சியின் உச்சத்தை தொடலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.