உலகிலேயே பழமையான உடலில் குத்தும் பச்சையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

2 பங்குனி 2018 வெள்ளி 15:42 | பார்வைகள் : 13173
உலகிலேயே ஆகப் பழமையான உடலில் குத்தும் பச்சையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொன்மையான, பதப்படுத்தப்பட்ட எகிப்திய சடலங்கள் இரண்டின் கைகளின் மேற்பகுதியில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று ஆணின் சடலம். மற்றது பெண்ணின் சடலம்.
ஆணின் கையிலிருந்த பச்சை, காளையையும் செம்மறியாட்டையும் சித்திரிக்கிறது. அந்த விலங்குகள் பலத்தையும் வீரியத்தையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.
பெண்ணின் கையிலிருந்த பச்சை நேரான கோடுகளையும் வளைந்த கோடுகளையும் சித்திரிக்கிறது. அவை அந்தஸ்து, வீரம் அல்லது மாயாஜாலம் பற்றிய அறிவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சாதாராண வெளிச்சத்தில் பச்சை சரியாகத் தென்படாது.
ஆனால் infrared புகைப்படத்தின் மூலம் அந்தப் பச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பழங்காலத்தில் பச்சை எத்தகைய பயனளித்தது என்பதைப் பற்றி ஆராய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆப்பிரிக்காவில் இதுவரை கிடைத்துள்ள பச்சை சார்ந்த கண்டுபிடிப்புகளைவிட இவை 1,000 ஆண்டுப் பழமையானவை.