அவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா!
11 மாசி 2020 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 9686
மஞ்சள் கலர் சட்டைய போட்டுக்கிட்டு பேங்ல நீண்ட க்யூ வரிசையில நின்னான் குமாரு... SBI ல பாஸ்புக் என்ட்ரிக்கு பணம் கட்ட பணம் எடுக்க எல்லாத்துக்கும் க்யூவா சலிச்சுகிட்டே நின்றான்..
பக்கத்துல ஒரு லொட லொடா பார்ட்டி நின்னான் பேரு மன்னாரு...
"என்னசார் சட்டை பளபளானு இருக்கு... புது மாப்பிள்ளை போல இருக்கீங்கசார்.. " பேச்சை துவக்கினான் மன்னாரு..
"இது கல்யாணசட்டை" னு சொல்லிக்கிட்டே லைன்ல முன்னேறினான் குமாரு...
" அப்படியா !! கல்யாணசட்டைய இன்னுமா பத்திரமா வச்சிருக்கீங்க.." நீங்க ரசனையான ஆளு சார்..னு பேச்சை தொடர்ந்தான் மன்னாரு..
"மகனுக்கு அதுக்காட்டியும் கல்யாணம் பண்னிட்டீங்களா..!!?... என்னசார் சொல்ரீங்க.. போன வருசம்தானே +2 ல சேத்தீங்க..!!?
" அதில்லப்பா... என் மகனுடைய பேரு கல்யாணம்.. அவசரத்துல அவன் சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா...
அதுக்கு அப்புறம் அவன் பேசவே இல்லே...!!?