Paristamil Navigation Paristamil advert login

வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்!

வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்!

2 மாசி 2020 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 10086


ஆசிரியர் ; நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன்.. அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்ட எத்தனை கோழி இருக்கும்.?

 
மாணவன் ; 5 இருக்கும் சார்...
 
ஆசிரியர் ; டேய்... நல்லா கேளு முதல்லே இரண்டு கோழி தர்றேன்.. மறுபடியும் இரண்டு தர்றேன்.. இப்ப சொல்லு.. நல்லா கூட்டி சொல்லு.. உன்கிட்டே எவ்வளவு கோழி இருக்கும்?
 
மாணவன் ; 5 தான் சார்..!
 
ஆசிரியர் ; உஷ்.. முடியலடா சாமி... சரி இதுக்கு பதில் சொல்லு... முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன்... அடுத்து இரண்டு ஆப்பிள் தர்றேன்.. மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்..?
 
மணவன் ; 4 சார்..!
 
ஆசிரியர் ; தப்பிச்சேன்... இப்போ கோழிக்கு வருவோம்.. 2 கோழி தர்றேன்... பிறகு மறுபடியும் 2 கோழி தர்றேன்.. இப்போ உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்..?
 
மாணவன் ; 5 சார்...
 
ஆசிரியர் ; அடேய்... லூசுப்பயலே... எப்படிடா 5 கோழி வரும்..?
 
மாணவன் ; சார்.. என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்..
 
ஆசிரியர் ...???!!???!!!??!!!?
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்