இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்!

12 தை 2020 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 12276
கல்லறையின் முன்னால் ஒருவன். "நீ செத்திருக்கவே கூடாது. நீ செத்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா? என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?" என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்.
அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார்.
அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.
"இல்லை" என்றான் அவன்.
"மகனா?" என்று கேட்டார் அவர்.
"இல்லை" என்றான் அவன்.
வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய். எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.
"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் அவன்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1