எதிரொலி காலை ஆறு மணிக்கு உங்களை எழுப்பி விடும்!
5 தை 2020 ஞாயிறு 16:20 | பார்வைகள் : 9757
சுற்றுப் பயணமாக ஸ்காட்லாந்துக்காரன் ஒருவன் அமெரிக்காவிற்கு வந்திருந்தான். அமெரிக்கன் ஒருவன் அவனுக்குத் தன் நாட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டு இருந்தான்.
பெரிய மலைக் குகையை அவனிடம் காட்டிய அமெரிக்கன், இங்கிருந்து நாம் என்ன பேசினாலும் இந்த மலைக் குகையில் பட்டு சரியாக நான்கு நிமிடங்கள் கழித்து அப்படியே எதிரொலித்தது.
பெருமையுடன் அவனைப் பார்த்த அமெரிக்கன், இதைப் போன்ற அற்புதம் எந்த நாட்டிலாவது உள்ளதா? என்று கேட்டான்.
அதற்கு ஸ்காட்லாந்துக்காரன், எங்கள் நாட்டு மலைப் பகுதியில் நாங்கள் முகாம் இட்டிருந்தோம். இரவு பத்து மணி ஆயிற்று நான் அங்கிருந்தவர்களிடம் நான் தூங்கப் போகிறேன், என்னைக் காலை ஆறு மணிக்கு எழுப்பி விடுங்கள், என்றேன்.
அவர்களில் ஒருவர், யாரும் உங்களை எழுப்ப வேண்டாம். பொழுது விடிந்து விட்டது எழுந்திரு, என்று உரக்கக் குரல் கொடுத்து விட்டுப் படுத்து விடுங்கள், எதிரொலி காலை ஆறு மணிக்கு உங்களை எழுப்பி விடும் என்றார்.
அவர் சொன்னதை நான் நம்பவில்லை.
இருந்தாலும் பொழுது விடிந்து விட்டது. எழுந்திரு என்று உரக்கக் குரல் கொடுத்து விட்டுப் படுத்தேன். என்ன வியப்பு! சரியாக எட்டு மணி நேரம் கழித்துக் காலை ஆறு மணிக்கு அந்த எதிரொலி பொழுது விடிந்து விட்டது. எழுந்திரு என்று என்னை எழுப்பியது என்றான்.