Paristamil Navigation Paristamil advert login

நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்!

நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்!

26 கார்த்திகை 2020 வியாழன் 14:53 | பார்வைகள் : 13091


கணவருக்கு உடம்பு சரியில்லை. அவரை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகிறார் மனைவி. கணவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், பின்னர் மனைவிக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

 
* டெய்லி காலையில் மறக்காமல் சாப்பிட வைங்க.
 
* அவரை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமான மனநிலையில் வச்சுக்கோங்க.
 
* அவருக்குப் பிடிச்சதா, சுவையா சமைச்சுக் கொடுங்க.
 
* உங்க பிரச்சினைகளை அவரிடம் கொட்டி அவரை டென்ஷன் ஆக்காதீங்க.
 
* எப்பப் பார்த்தாலும் டிவி பாக்காதீங்க. பேஸ்புக் பாக்காதீங்க. வாட்ஸ்-அப் பாக்காதீங்க.
 
* நகை நட்டுனு கேட்டு நச்சரிக்காதீங்க. அவரை ஃபிரியா இருக்க விடுங்க. இதே மாதிரி ஒரு வருஷம் இருந்தா, உங்க வீட்டுக்காரர் நல்லாயிருவாரு. கவலைப் படாதீங்க.
 
ஓகே டாக்டர் நாங்க வர்றோம்.
 
வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்.
 
ஆமா, டாக்டர் உன்னை தனியாக கூப்பிட்டு ஏதோ சொன்னாரே. என்ன சொன்னார்?
 
அதுவா. நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்