Paristamil Navigation Paristamil advert login

உன் பேர் சொல்லு...!!

உன் பேர் சொல்லு...!!

5 கார்த்திகை 2018 திங்கள் 05:20 | பார்வைகள் : 9389


ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... 
 
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க... 
 
சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி... 
 
"உன் பேர் சொல்லு" 
"பழனி" 
"உன் அப்பா பேரு" "பழனியப்பா", 
 
அடுத்தப் பையன எழுப்பி , 
"உன் பேர் சொல்லு" "மாரி" 
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..." 
 
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது ... 
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி... 
"உன் பேர் சொல்லு" 
"பிச்சை" 
"உன் அப்பா பேரு" 
"பிச்சையப்பா" 
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு... 
 
அடுத்தப் பையன எழுப்பினாரு... 
 
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம் ) 
 
"ஜான்" 
"இப்பொ உன் பேரைச் சொல்லு" 
"ஜான்சன்" 
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி... 
 
அடுத்த பையன எழுப்பி, 
"உன் அப்பா பேர சொல்லு..." 
"டேவிட்.." 
"உன் பேரு...?" 
"டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு, 
 
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி, 
அடுத்த பையன எழுப்பி, 
 
"உன் தாத்தா பேர சொல்லு... " 
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?" 
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு, 
"அப்பாவோட தாத்தா... ."ன்னாரு 
"வீரமணி", 
"சரி அப்பா பேரு?", 
"வீ.ரமணி", 
"உன் பேரு? ", 
"வீ.ர.மணி... " 
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...  

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்