நீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்!
4 புரட்டாசி 2019 புதன் 17:05 | பார்வைகள் : 9813
நகரம் ஒன்றின்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து.....
தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...
ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....
காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது
என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!
(உதாரணத்திற்க்கு.....
தமிழ் வீட்டில் வளரும் நாய்
உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)
எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட...
.
அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....
கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர்
பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......
அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....
அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது
விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது
உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... .
உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....
பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...
அவர் மறுத்துவிட்டார்...
எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...
அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....
ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
...
அதற்க்கு அவர்...சொன்னார்....
இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....
அவள் சொல்வாள்...
.
""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."."..
அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன்
அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
படித்ததில் ஈர்த்தது....!