Paristamil Navigation Paristamil advert login

நல்ல சேதி சொல்லட்டுமா? கெட்ட சேதியை சொல்லட்டுமா?

நல்ல சேதி சொல்லட்டுமா? கெட்ட சேதியை சொல்லட்டுமா?

14 தை 2015 புதன் 10:36 | பார்வைகள் : 9030


 நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார் 40 வயதேயான ரமேஷ். அவரது செல்போன் சிணுங்கவே, மனைவி மல்லிகா, போனை எடுத்து கணவனிடம் கொடுத்தார். எதிர்முனையில் பேசியது ரமேஷுக்கு சிகிச்சை கொடுக்கும் டாக்டர் அரவிந்த். 

 
 
டாக்டர்: ரமேஷ் உங்களுக்கு ஒரு நல்ல சேதியும் இருக்கு, கெட்ட சேதியும் இருக்கு. எதை நான் முதலில் சொல்ல என்று தெரியவில்லை. 
 
ரமேஷ்: எதற்கும் நல்ல சேதியை முதலில் சொல்லிவிடுங்கள். நான் கஷ்டத்தை தாங்கும் மன நிலையில் இப்போது இல்லை. 
 
டாக்டர்: ஓ.கே, ரமேஷ். நீங்கள் 24 மணி நேரத்திற்கு உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது. 
 
ரமேஷ் (ஷாக் ஆகி): என்ன டாக்டர் சொல்றீங்க. இதுதான் நல்ல சேதியா.. அப்போ கெட்ட சேதி என்ன டாக்டர்..? 
 
டாக்டர்: நான் இதைச் சொல்ல நேத்தே போன் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா மறந்து போய் இன்னிக்கு பண்றேன். இதுதான் சார் அந்த கெட்ட சேதி. 
 
ரமேஷ்: !?!?!?
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்