எமது தாயகத்தை பாதுகாத்திட காலநிலை ஆர்வலர்களாக மாறுவோம்
14 மாசி 2023 செவ்வாய் 12:32 | பார்வைகள் : 4778
சமகால உலகம் எதிர்நோக்கியுள்ள பிரதான சவாலாக புவி வெப்பநிலை உயர்வடைதல் காரணமாக தோன்றுகின்ற காலநிலை மாற்றங்களை எடுத்துக்காட்டலாம்.
மானிடச் செயற்பாடுகள் மூலமாக வளிமண்டத்தில் விடுவிக்கப்படுகின்ற பச்சைவீட்டு வாயுக்கள் (GHG) காரணமாகவே புவி வெப்பநிலை உயர்வடைதல் அதிகரித்துள்ளது.
புவி வெப்பநிலை உயர்வடைதல், காலநிலை மாற்றங்கள் போன்றே பல்வேறு விதமாக இடம்பெறுகின்ற சுற்றாடல் மாசுபாடுகளினால் உயிர்ப்பல்வகைமை வளம் நலிவடைதலைப்போன்றே புவியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேய்வடைதலும் பாரதூரமான பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் சுகாதார சிக்கல்களுக்கு உலகவாசிகளான நாங்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற கவலைக்கிடமான நிலைமையாகும்.
புவிமீதான நல்வழியுரிமை பற்றிய இயற்கை ஒழுங்குறுத்தல் நெறிமுறையின்படி நோக்குகையில் மேற்சொன்ன மாசுபாடுகள் தரங்குன்றல் நிலைமைகள் உயிரின் வழியுரிமைக்கு மாத்திரமன்றி மானிட நாகரிகத்தின் வழியுரிமைக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
தோன்றக்கூடிய அச்சுறுத்தலை கட்டுப்படுத்தி உயிரினதும் மானிட கலாசாரத்தினதும் வழியுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே சுற்றாடலை முதன்மையாகக்கொண்டு நோக்குகின்ற சமநிலைவாய்ந்த அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கான நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்கி நிகழ்கால உலக சமூகம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
எவ்வாறாயினும் நிலைபேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஏதேனும் வகையிலான இடையூறுகள் நிறைந்த பின்னணியை உருவாக்க உயர்வடைந்து வருகின்ற புவி வெப்பநிலையைப் போன்றே அதனால் தோன்றுகின்ற காலநிலை மாற்றங்களும் ஏதுவாக அமைந்துள்ளன.
தோன்றுகின்ற மேற்சொன்ன இடையூறுநிறைந்த பின்னணியை தணிப்பதற்காகவே 2016 இல் உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து "பரிஸ் உடன்படிக்கையை" கைச்சாத்திட்டு உலகளாவிய மேடையை அமைத்துக்கொண்டன.
இந்த உடன்படிக்கை மூலமாக காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
புவி வெப்பநிலை உயர்வடைதலை 2 பாகை செல்சியஸிற்கு கட்டுப்படுத்துவதை மட்டுப்படுத்துகின்ற இலக்கினை உறுதிசெய்கின்ற அதேவேளையில் வெப்பநிலை உயர்வடைதலை 1.5 பாகை செல்சியஸ் வரை மட்டுப்படுத்திக் கொள்ளல் பரிஸ் உடன்படிக்கையின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.
காலநிலை மாற்றங்களும் பாதகமான தாக்கங்களும்
துருவப் பிரதேசங்களின் பனிப்பாறைகள் மற்றும் இமாலயத்தில் பனியினால் மூடப்பட்ட மலைமுகடுகள் கரைந்து செல்வதன் காரணமாக தோன்றுகின்ற கடல் நீர்மட்டம் உயர்வடைதலுடன் கரையோரப் பிராந்தியங்களில் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்குகின்ற ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளன.
அதைப்போலவே அந்த பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு உயிர் அபாயநேர்வும் உருவாகின்றது.
பருவகால நிலைமைகளின் மாற்றங்கள் காரணமாக நீண்டகால வறட்சி நிலைமைகள், குறுங்காலத்தில் ஏற்படுகின்ற மிகையான மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், பயிர்ச்செய்கை அழிவு, பெருந்தொற்று நோய்கள் அதிகரிக்கின்றமை போன்றே சூழற்தொகுதிகளுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் சேதமேற்படுகின்றது.
வரலாறு முழுவதிலும் உணவு உற்பத்திக்காக தாவர வகையினங்களின் பன்வகைமை பாவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 6,000 இற்கு மேற்பட்ட தாவர வகையினங்கள் பயிர்செய்யப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளதோடு இன்றளவில் ஒட்டுமொத்த உணவுப்பயிர் உற்பத்தியில் 66% ஆனது 09 தாவர வகையினங்கள் எனும் மிகச்சிறிய வகையினங்கள் சிலவற்றிலேயே தங்கியுள்ளன.
இவ்விதமாக செழிப்பான உயிர்ப்பல்வகைமையை நாங்கள் இழந்துள்ளோம். பயிர்ப்பன்வகைமையின் தரங்குன்றலே பயிர்ப் பல்வகைப்படுத்தலுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது.
மானிடச் செயற்பாடு காரணமாக வளிமண்டலத்தில் விடுவிக்கப்படுகின்ற காபனைட் ஒக்சைட்டின் அளவு அதிகரித்தலே இவ்விதமாக மானிட வழியுரிமைக்கு பாதகமான பின்னணியொன்று கட்டியெழுப்பப்பட காரணமாக அமைந்தது.
புவி வெப்பநிலை உயர்வடைவதில் தாக்கமேற்படுத்துகின்ற காபனைட் ஒக்சைட்டின் விடுவித்தலுக்கான பங்கில் 1/3 இற்கு மேற்பட்ட அளவினை ஐக்கிய அமெரிக்காவே மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பாவின் கைத்தொழில் நாடுகளைப்போன்றே ஏனைய பிராந்தியங்களில் கைத்தொழிலாக்கத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் காபன் வெளியேற்றத்தின் பலம்பொருந்திய பங்காளிகளாகும்.
இலங்கை விருத்தியடைந்த கைத்தொழில் நாடுகளுடன் சார்புரீதியாக காபன் வெளியேற்றத்தில் மிகவும் குறைவான பங்களிப்பினை வகித்தபோதிலும் புவி வெப்பநிலை, காலநிலை மாற்றங்களுக்கு எதிரான நிகழ்கால உலகளாவிய சுற்றாடல் செயற்பாட்டில் கூட்டாக ஒரு முன்னணியாக செயலாற்றவேண்டியது அவசியமாவதோடு அது இணக்கம்சார்ந்த கடப்பாடாகவும் அமைகின்றது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின்படி கடந்த பத்து வருடங்கள் மானிட வரலாற்றில் "வெப்பநிலை மிகவும் அதிகமான தசாப்தம்" என அழைக்கப்படுகின்றது. அதைப்போலவே உலகளாவியரீதியில் பதிவாகிய வெப்பநிலை மிகவும் அதிகமான மூன்று வருடங்களில் ஒன்றாக 2,000 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
வளிமண்டலத்திற்கு காபன் வெளியேற்றப்படுதலை பரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக இணக்கப்பாட்டுக்கு வந்த மட்டத்திற்கு கொண்டுவர உலக சமூகம் தவறுமாயின் புவி வெப்பநிலை உயர்வடைவதன் துன்பதுரயங்கள் வருங்காலத்தில் மென்மேலும் தீவிரமடையக்கூடும்.
புவி வெப்பநிலை, மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாகவும் பல்வேறுவிதங்களில் இடம்பெறுகின்ற சூழற்றொகுதி தரங்குன்றுதல் புவியன்னையால் தாங்கிக்கொள்ள முடியாத மட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் மேற்சொன்ன பாதகமான நிலைமையை கட்டுப்படுத்தி சுற்றாடல் சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகளால் 2021 - 2030 தசாப்தம் "சூழற்றொகுதி மீள்நிறுவுகை தசாப்தம்" என பெயர்குறிக்க காரணமாக அமைந்துள்ளது.
காலநிலை மாற்றங்களும் இலங்கையின் அபாயநேர்வும்
ஜேர்மன் வொச் (German Watch) அமைப்பின் 2020 புவிக் காலநிலை மாற்ற அபாயநேர்வு தசாப்தத்திற்கு அமைவாக, காலநிலை மாற்றங்களுக்கு இரையாகக்கூடிய நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தை வகித்தது.
ஐக்கிய நாடுகளின் இலங்கை ஊடக மத்தியநிலையமும் இலங்கை ஓர் வறிய நாடு என்ற வகையில் கடல் மட்டம் உயர்வடையும் அச்சுறுத்தலையும் மிகையான மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, உலர் வானிலை போன்றே எதிர்பாராத இயற்கை அனர்த்த அபாயநேர்வினைக் கொண்டதெனக் குறிப்பிடுகின்றது.
மேற்சொன்ன அபாயநேர்வுக்கு முகங்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான உபாயமார்க்க நிகழ்ச்சித்திட்டம் மூலமாக காலநிலைத் தாக்கங்களை குறைப்பதற்கான பல நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சித்திட்டங்களாக அமைவன இடர்கள் காரணமாக மிகுந்த அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடிய பிரதேசங்களில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறுகின்றவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தல், பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்தல், பசுமைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நிலைபெறுதகு நீர் வள முகாமைத்துவம், இடர் அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான இசைவாக்கச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் என்பனவாகும்.
பரிஸ் உடன்படிக்கைக்கிணங்க செயலாற்றி அந்தந்த நாடுகளால் உலக சுற்றாடலில் சேர்க்கப்படுகின்ற காபன் அளவினை குறைத்துக்கொள்ள அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்காக கைத்தொழில்கள் மற்றும் தொழில்முயற்சிப் பிரிவைப்போன்றே சுற்றாடல் அமைப்புகளினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பொதுவில் எடுத்துக்கொண்டால் அனைவரும் கூட்டுச்சேர்ந்து ஒரு சமூகம் என்றவகையில் இதன்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு அமைவாக எம்மை இசைவாக்கிக் கொள்வதையும் ஒரு சமூகம் என்றவகையில் நாங்கள் கட்டாயமாக செயற்படவேண்டும்.
காலநிலை மாற்றங்களுக்கு அமைந்தொழுகுதல் மற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்.
காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக அதற்கு அமைந்தொழுகுவதற்கான செயற்பாடுகளை உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றும் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய திட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, நீர் வளங்கள், கடற்கரையோர மற்றும் கடலக வளங்கள், சுகாதாரம், மானிடக் குடியிருப்புகளும் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளும், சூழற்றொகுதிகளும் உயிர்ப்பல்வகைமையும், சுற்றுலாத் தொழிற்றுறையும் பொழுதுபோக்கும், விவசாய ஏற்றுமதிகள், கைத்தொழில்கள், வலுச்சகதி மற்றும் போக்குவரத்தினைப் போன்றே அமைந்தொழுகுவதற்கான செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக அவசியமான வேறு அவசியப்பாடுகள் என்றவகையில் மேற்படி பிரதான விடயத்துறைகளின்கீழ் அமைந்தொழுகத் தேவையான ஆக்கமுறையான செயற்பாடுகள் விதப்புரைசெய்யப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பு சம்பந்தமாக உணவுப் பன்வகைமை மேம்பாடு, வெள்ளப்பெருக்கு, வறட்சி, பூச்சிகொல்லிகள் மற்றும் களைகளின் தொல்லைகளுக்கு ஒத்துவரக்கூடிய விதையினங்களை அறிமுகஞ்செய்து மேம்படுத்துதல், நீர் வினைத்திறனுக்கான முறையியல்களின் மேம்பாடு, காலநிலை எதிர்வுகூறல்களுக்கு அமைவாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்தல், விவசாயிகளுக்கு வானிலைத் தகவல்களை அந்தந்த சந்தர்ப்பங்களுக்கமைவாக வழங்குவதற்கான தொடர்பாடல் முறையொன்றை உருவாக்குதல், காலநிலை அபாயநேர்வுகளை எதிர்கொள்வதற்கான முறையியல்களை இனங்காண்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மேற்படி தேசியத் நிகழ்ச்சித்திட்டத்திற்கிணங்க முதன்மையாக மேற்கொள்ளவேண்டிய இசைவாக்கப் பணிகளாக இனங்காணப்பட்டுள்ளன.
நீரேந்து பரப்புக்களின் பேணுகைக்கான முகாமைத்துவத் திட்டமொன்றை வகுத்தலும், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும், நீர்பாசனத்திற்கான நீரை வினைத்திறன்மிக்கதாக பாவித்தலும், விரயத்தைக் குறைத்தலும், காலநிலை அனர்த்தங்களுக்கு தீவிரமாக முகங்கொடுக்கின்ற பிரதேசங்களில் நீர் முகாமைத்துவத்திற்கு அவசியமான பயிற்சிகளை வழங்குதலும், அனர்த்த அபாயநேர்வு முகாமைத்துவத் திட்டமொன்றை உருவாக்கி வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களை எதிர்நோக்குகின்ற குழுக்கள் இருக்கின்ற பிரதேசங்களை முறைப்படி சரியாக இனங்காண்பதற்கான வரைபடம் தயாரித்தலும் அந்தந்த பருவங்களில் மிகையான மழைநீரை களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதும் அதற்காக குளங்களை அமைத்தல், புனரமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலும் நீர் வளங்களை பாதுகாப்பதற்கான அமைந்தொழுகல் செயற்பாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன.
கடற்கரையோர மற்றும் கடலக வளங்கள் துறைக்கான அமைந்தொழுகல் செயற்பாடாக கடல்மட்டம் உயர்வடைவதால் கரையோர மக்களுக்கு ஏற்படுகின்ற தாக்கம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளல், கரையோர மக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், தீவிரமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள குழுக்களை இனங்காண்பதற்கான வரைபடங்களை தயாரித்தல், கரையோர அரிப்பினைத் தடுத்து அப்பிரதேசங்களின் பேணுகைக்காக கல்வேலிகள், மணல் வேலிகள் போன்றே காடு வளர்ப்பினை மேற்கொள்ளல் போன்றவை முக்கியமான இசைவாக்கச் செயற்பாடுகள் என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
காலநிலைக் காரணிகளை அடிப்படையாகக்கொண்ட நோய்கள் பற்றி கவனமாக இருப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தலும் அமுலாக்குதலும், அத்தகைய நோய்களும் பெருந்தொற்றுகளும் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல், காலநிலை நிலைமைகளின்கீழ் தோன்றுகின்ற நோய்கள் பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொள்ளல், அவசியமான தகவல் பரிமாற்றத்திற்கான அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் மற்றும் சுகாதார முகாமைத்துவப் பிரிவுகளை இணைப்பாக்கம் செய்கின்ற பொறியமைப்பொன்றினை வகுத்தல், காலநிலை மற்றும் சுகாதார அனர்த்தங்கள் சம்பந்தமாக பொதுமக்களைப் போன்றே சுகாதார ஊழியர்களுக்கும் முறையான அறிவையும் பயிற்சியையும் வழங்குதல் போன்றவை சுகாதாரத் துறையை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விதந்துரைக்கப்பட்ட அமைந்தொழுகல் செயற்பாடுகளாகும்.
மானிடக் குடியிருப்புகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவாக அமைவது காலநிலைத் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்களை அறிமுகஞ்செய்தலும் மேம்படுத்தலும், காலநிலைத் தாக்கங்கள் அதிகமாக நிலவுகின்ற பிரதேசங்களில் விடமைப்புத் திட்டங்களை அங்கீகரிப்பதற்கான முறையியல்களை பொருத்தமான வகையில் மீளாய்வுசெய்தல், காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்கள் அதாவது, பசுமை எண்ணக்கரு வீடமைப்புத் திட்டங்கள் போன்றே பொருத்தமான மாற்றுப் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், கைத்தொழில் உரிமையாளர்களுக்கு காலநிலைக்கு அமைந்தொழுகக்கூடிய வீடமைப்பு நிர்மாணம் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளடக்குதல், நகர்சார், கிராமிய, தோட்டக் குடியிருப்புகளுக்காக முன்கூட்டிய அனர்த்த தயார்நிலைத் திட்டத்தை தயாரித்தலும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் என்பனவாகும்.
சுற்றாடல் பேணுகையும் அமைந்தொழுகல் செயற்பாடுகளும்
சூழற்றொகுதிகளுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் ஏற்படுகின்ற வானிலை மற்றும் காலநிலை தாக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், பிரதான சூழற்றொகுதிகள் மற்றும் உயிர்ப்பல்வகைமை காரணிகளுக்காக வானிலைத் தாக்கத்தை இனங்காண்பதற்காக விரிவான அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டமான்றை தயாரித்தல், வானிலைசார்ந்த காலநிலைசார்ந்த கூருணர்வுமிக்க சூழற்றொகுதிகளுக்காக அமைந்தொழுகுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளடக்குகின்ற முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல், கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகிய சூழற்றொகுதிகளையும் தாவர விலங்கின சாகியங்களையும் அபாயநேர்விலிருந்து மீட்டெடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல், சூழற்றொகுதிக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் ஏற்படுகின்ற காலநிலை தாக்க பேரிடர்களை இனங்காண்பதைப்போன்றே அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான ஆராய்ச்சி நிறுவனக் கொள்திறன்களை முன்னேற்றுதல் ஆகியவை சூழற்றொகுதி மற்றும் உயிர்பல்வகைமை பேணுகைக்கான அமைந்தொழுகல் செயற்பாடுகளாகும்.
சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கு எனும் விடயத்துறையுடன் தொடர்புடைய அமைந்தொழுகல் செயற்பாடுகளாக அமைவன: வானிலை பேரிடர்கள் சம்பந்தமாக சுற்றலாக் கைத்தொழில் நெறிப்படுத்துனர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல், சுற்றுலாத்துறை நெறிப்படுத்துனர்களுக்கு போன்றே சுற்றுலாப் பயணிகளுக்கும் அவசர தகவல்களை வழங்குகின்ற தொடர்பாடல் பொறியமைப்பொன்றினை தயாரித்தல், காலநிலை மாற்ற பேரிடர்கள் மற்றும் தொல்லைகள் நிறைந்த பிரதேசங்களை இனங்காணல் மற்றும் அப்பிரதேசங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளல் பற்றி கவனஞ்செலுத்தவேண்டியதன் தீவிரமான அவசியத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் அப்பிரதேசத்தைச்சேர்ந்த சுற்றுலாக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களை அமைந்தொழுகல் செயற்பாடுகளின்பால் ஆற்றுப்படுத்துதல், சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் பொழுதுபோக்கிற்கும் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை நடாத்துதல் என்பனவாகும்.
விவசாய ஏற்றுமதி விடயத்துறையுடன் ஏற்புடைய அமைந்தொழுகலாக அமைவது வெப்பநிலைக்கு, வறட்சிக்கு, வெள்ளப்பெருக்கு மற்றும் பிற பூச்சிகொல்லிகளின் தொல்லைகள் மற்றும் களைகொல்லிகளின் தொல்லைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய புதிய விவசாய முறையியல்களை அறிமுகஞ்செய்தல் ஊடாக பயிர்ச்செய்கை முகாமைத்துவ ஆற்றல்களை அதிகரித்தல், பயிர்ச்செய்கைகள் சார்ந்த ஏற்றுமதி விதையினங்களுக்கான காலநிலை தாக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், இடர் அபாயநேர்வு அதிகமாக நிலவுகின்ற விதையினங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் சம்பந்தமாக தகவல்களை இனங்காணவும், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதைப்போலவே அனைத்துவிதமான விதையினங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கான இடர்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளிட்ட வீதி வரைபடத்தை தயாரித்தல், ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் சம்பந்தமான காலநிலைத் தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக அவசியமான செயற்பாடுகளை வசதிப்படுத்தும் பொருட்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் கொள்திறன்களை முன்னேற்றுதல் விவசாய ஏற்றுமதிப் பிரிவினை பாதுகாப்பதற்கான அமைந்தொழுகல் முன்மொழிவுகளாகும்.
புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை ஊக்குவித்தல், நீர்மின்சக்தி வினைத்திறனை ஏற்படுத்துதல், காலநிலைக் கூருணர்வுபடைத்த விவசாய மூலப்பொருட்களின் வழங்கலை ஊக்குவித்தல், வலுச்சக்தி, போக்குவரத்து, கைத்தொழில்கள் ஆகிய வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்காக இடர்களுடன் தொடர்புடைய அவசரத் தொடர்பாடலின்பொருட்டு முறையியலொன்றை வகுத்தல், கைத்தொழில்கள், வலுச்சக்தி, போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு ஏற்படுகின்ற காலநிலை தாக்கங்களை இனங்காண்பதற்கான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் என்பவற்றை கைத்தொழில்கள், வலுச்சக்தி, போக்குவரத்து விடயத்துறைகளுக்கான அமைந்தொழுகல் செயற்பாடுகளாக குறிப்பிட முடியும்.
காலநிலை தாக்கங்களுக்கு அமைந்தொழுகலுக்கான தாபனஞ்சார் கொள்கைகள் மற்றும் மாற்று அவசியப்பாடுகள் துறை சம்பந்தமான முன்மொழிவுகளாக அமைவன, இலங்கையில் வானிலை அமைந்தொழுகலுக்கு அவசியமான நடவடிக்கைகளுக்கான அந்தந்த துறைகளின் கொள்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள், சகமகாலரீதியாக மீளாய்வு செய்யப்படுதல், அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்காகவும் காலநிலை தாக்கங்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு சமகால கொள்கைசார்ந்த விதப்புரைகளை சேர்த்தல், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கான அமைந்தொழுகல் தேசிய திட்டத்தை (NAP) அமுலாக்குவதற்கான தேசிய மத்தியநிலையமாக "காலநிலை மாற்றங்கள் பற்றிய செயலகம்" என்பதை மீள்நிறுவி பலப்படுத்துதல் என்பனவாகும்.
காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக அமைந்தொழுகுகின்ற தேசிய திட்டத்துடன் தொடர்புடையதாக மேலே குறிப்பிட்டவாறு அந்தந்த விடயத்துறைகளில் அமைந்தொழுகல் செயற்பாடுகள் அந்தந்த விடயத்துறைகளுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் ஈடேற்றப்படல் வேண்டுமென்பதோடு, அவசியமான சந்தர்ப்பங்களில் அமைச்சுக்களுக்கிடையிலான பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றளவில் அந்தந்த துறைகள் சம்பந்தமாக ஆக்கமுறையான முன்னேற்றமும் பெறப்பட்டுள்ளதென்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
காலநிலை மாற்றங்கள் பற்றிய செயலகத்தின் இடையீடு
காலநிலை மாற்றங்களுக்கு அமைந்தொழுகுகின்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக, "காலநிலை மாற்றங்கள் பற்றிய செயலகம்" சுற்றாடல் அமைச்சின்கீழ் இடஅமைவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் பற்றிய தேசிய கொள்கை அமுலாக்கல் பொறியமைப்பாகவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய சட்ட உடன்பாட்டுக்கு, கியட்டோ உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கைக்கு ஏற்புடையதாக செயலாற்றிவருகின்ற தேசிய பொறியமைப்பாகவும் இந்த செயலகம் இயங்கிவருகின்றது.
காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கான ஒத்துழைப்புக் கருத்திட்டத்தின்கீழ் காபன் வர்த்தக நிர்ணய சாதனங்களை இனங்காணுதல் மற்றும் அமுலாக்குதல் மூலமாக பச்சைவீட்டு வாயு (GHG) வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலமாக காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கான பங்களிப்புகளின் இலக்குகளை நெருங்கியுள்ளதோடு இலங்கை காபன் வரவினப் பகிர்வு செயற்றிட்டம், தேசிய காலநிலை மாற்ற தரவுப் பரிமாற்ற வலையமைப்பு மற்றும் இலங்கை காபன் பதிவேட்டினை தயாரித்தலுடன் அமைந்தொழுகுதல் போன்ற புதிய பொறியமைப்புகளை நிறுவுவதன் மூலமாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக அண்மையில் ஜப்பானுடன் காபன் வரவினப் பகிர்வு பொறியமைப்பு (Carbon Credit Sharing) தொடர்பான உடன்படிக்கையில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கைச்சாத்திட்டார். இவ்விதமாக நாட்டுக்கு சாதகமான பல உடன்படிக்கைகளில் எதிர்காலத்தில் சேர்ந்துகொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
அதைப்போலவே நிலைபெறுதகு நுகர்வு உற்பத்திக் கொள்கையும் காலநிலை மாற்றங்கள் பற்றிய தேசிய தொடர்பாடல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் பற்றி அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பாவித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வூட்ட சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வளியின், நீரின் தரத்தைப் பேணிவருதல், ஓசோன் படலத்தை பாதுகாத்தல், உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாத்தல் போன்றே காலநிலை மாற்றங்களுக்கு அமைந்தொழுகுகையில் நைதரசன் முகாமைத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.
ஒவ்வோராண்டிலும் பாவனைக்கு எடுக்காத பதிற்செயல் நைதரசன் விரயமாவதை தடுப்பதன் மூலமாக பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நைதரசன் வட்டத்தை முழுமையாக முகாமைத்துவம் செய்து நன்மைகளைப் பெறுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசுமை காலநிலை நிதியம் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் காலநிலை மாற்றங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள சவால்களை எதிர்கொள்ள அவசியமான நிதிசார் வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிரதான தோற்றுவாய் ஆகும். இதன் நன்மைகளை பெற்றுக்கொள்ள அவசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றங்களின் கட்டுப்பாட்டுக்கான தரப்பினர்களின் 27 வது கூட்டத்தொடர் அந்தந்த நாட்டுத் தலைவர்களின் தலைமையில் எகிப்தின் ஷார்ம் எல். ஷிக் நகரத்தில் அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் மேன்மைதங்கிய ஜனதிபதியவர்களும் கௌரவ சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் அவர்களும் பங்கேற்றனர். அங்கு ஜனாதிபதி மிகவும் முக்கியமான கூற்றினை வெளியிட்டார்.
ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றுகையில், அபிவிருத்தியடைந்த நாடுகளின் மட்டற்ற கைத்தொழில்மயமாக்கம் காலநிலை மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணமெனவும் அதனால் அபிவிருத்தியடைந்து வருகின்ற எம்மைப்போன்ற நாடுகளில் ஏற்படுகின்ற நட்டத்திற்காகவும் சேதத்திற்காகவும் இழப்பீடு செலுத்துவதற்காக அபிவிருத்தி அடைந்த நாடுகள் அவர்களின் நிதியங்களை இருமடங்காக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். காலநிலை நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் பொருட்டு உள்நாட்டு வெளிநாட்டு ஆலோசகர்களையும் நியமித்து குறித்துரைத்த செயற்பாங்கிற்காக அரசாங்கத்திடம் நிலவுகின்ற அர்ப்பணிப்பையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின்கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அரும்பணி "விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான மற்றும் சட்டமுறையான இடையீட்டின் அடிப்படையில் சுற்றாடல் பேணல், முகாமைத்துவ மற்றும் மேம்பாட்டு பணிகள் ஊடாக தலைசிறந்த சேவையை வழங்கி பரிசுத்தமான பசுமை சுற்றாடலை உருவாக்கிக்கொள்ளலைப்போன்றே பொதுசன மேம்பாட்டுக்காகவும் நிலைபெறுதகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காகவுமே" என்றே தயாரிக்கப்பட்டுள்ளது. வளி மாசுபாடு, நீர் மாசுபாடு, கைத்தொழில் மாசுபாடு போன்றே காபன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இடையீடுசெய்து சுற்றாடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை செயலாற்றி வருவதோடு புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மேம்பாட்டுக்கு அவசியமான உதவிகளைப்போன்றே பொதுமக்களுக்கிடையில் பசுமை வாழ்க்கை செயற்பாங்கினைக் கட்டியெழுப்புவதற்காக பலவேறு கல்வி மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கியும் வருகின்றது.
காலநிலை மாற்ற நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான உலகளாவிய மேடையில் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு செயற்பாடுகளும் வலுப்படுத்தப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் உலகில் வசிக்கின்ற எம்மனைவரதும் கடமையும் பொறுப்புமாக அமைவது மேற்சொன்ன அரசியல் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான அவசரத் தேவையாகக் கருதி "காலநிலை ஆர்வலர்" என்றவகையில் செயலாற்றுவதாகும். ஏதேனும் குறித்துரைத்த நிலப்பரப்பினை நாங்கள் எமது தாயகமாக கருதினாலும் காலநிலை நெருக்கடியின் மத்தியில் "ஒட்டுமொத்த புவியுமே எமது தாயகமாக அமைகின்றது" என்பதால் இன, மத மற்றும் அரசியல் குறுகிய பேதங்களின்றி மானிட சமூகமானது உலகக் குடும்பத்தின் அங்கத்தவர்களாக "காலநிலை நியாயத்திற்காக" கூட்டாக அணிதிரள வேண்டியதன் அவசியம் கட்டாயமாக தோன்றியுள்ளது.
நன்றி வீரகேசரி