Paristamil Navigation Paristamil advert login

துருக்கி பூகம்பம் - பெயர் முகவரிகளை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள்

 துருக்கி பூகம்பம் - பெயர் முகவரிகளை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள்

12 மாசி 2023 ஞாயிறு 07:10 | பார்வைகள் : 4546


துருக்கியின்  அடானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மிகச்சிறியவர்கள்.
 
 கைக்குழந்தைகள் -தாங்கள் எவ்வளவு விடயங்களை இழந்துவிட்டோம் என்பதை அறிய முடியாதவர்கள்.
 
தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு மாதகுழந்தைக்கு மருத்துவர்கள் உணவு வழங்குவதை நான் பார்த்தேன்.
 
குழந்தையின் பெற்றோரை இதுவரை மீட்க முடியவில்லை.
 
பெற்றோர்கள் உயிரிழந்த அல்லது அவர்களை கண்டுபிடிக்க முடியாத நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது துருக்கியில் உள்ளனர்.
 
அவர்களின் வீடுகளை தரைமட்டமாக்கிய பூகம்பம் தற்போது அவர்களின் பெயர்களையும் அழித்துவிட்டது.
 
தீவிரகிசிச்சை பிரிவில் உள்ள பெண் குழந்தையின் கையை மருத்துவர் நேர்சா கெஸ்கின் பற்றிப்பிடிக்கின்றார்.
 
அந்த குழந்தையின் கட்டிலில் பெயரில்லாத என எழுதப்பட்டுள்ளது.
 
அந்த குழந்தை பல முறிவுக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
கறுப்புக்கண்களும் முகமும் கடுமையான உராய்வுக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது,ஆனால் திரும்பி எங்களை பார்த்து சிரிக்கின்றாள்.
 
இந்த குழந்தை எங்கு மீட்கப்பட்டாள் அங்கு எப்படி சிக்குண்டாள் என்பது எங்களிற்கு தெரியும் ஆனால் நாங்கள் தற்போது அவளது முகவரியை கண்டுபிடிக்க முயல்கின்றோம் தேடுதல் தொடர்கின்றது என்கின்றார் மருத்துவர் கெஸ்கின்.
 
ஏனைய பகுதிகளில் இடிந்துவிழுந்த கட்;டிடங்களில் இருந்து மீட்கப்பட்டவர்களே இந்த குழந்தைகள்.
 
காயமடைந்த 260 குழந்தைகள் குறித்த விபரங்களை தங்களால் பெறமுடியவில்லை என துருக்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
பாதிக்கப்பட்ட பல பகுதிகளிற்கு மீட்பு பணியாளர்கள் செல்லும்போது வீடிழந்தவர்களின் எண்ணிக்கை தெரியவரும்போது இந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
 
நோயாளிகள் நிரம்பிய பகுதி ஊடாக நான் மருத்துவர் கெஸ்கின் உடன் நடக்கின்றேன்.
 
பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை டிரொலிகளில் காணமுடிகின்றது ஏனையவர்கள் அவசரபிரிவில் மெத்தைகளிற்குள் காணப்படுகின்றனர் அங்கு காயமடைந்த சிறுவர்களும் காணப்படுகின்றனர்.
 
நாங்கள் ஐந்து அல்லது ஆறுவயது சிறுமியை சந்தித்தோம்.
 
அவள் உறங்கிக்கொண்டிருந்தோம் சலைன் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது தலையில் பல காயங்கள் என மருத்துவ தாதியொருவர் தெரிவித்தார்.
 
அந்த சிறுமியால் தனது பெயரை தெரிவிக்க முடியுமா என நான் கேட்டேன்.
 
இல்லை கண்ணால் பார்ப்பதும் சமிக்ஞைகளும்தான் என்கின்றார் சிறுவர்கள் சத்திரகிசிச்சை நிபுணர்.
 
அதிர்ச்சி காரணமாக இந்த சிறுவர்களால் பேச முடியாது அவர்களிற்கு தங்கள் பெயா தெரியும் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதும் நாங்கள் அவர்களுடன் பேச முயல்வோம் என்கின்றார் மருத்துவர்.
 
சிறுவர்களின் முகவரிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளில் சுகாதார தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 
 தரைமட்டமாகிய கட்டிடங்களில் எந்த பகுதிகளில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டனர் என்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.
 
ஆனால் அந்த முகவரிகள் வெறும் கற்குவியல்களாக காணப்படுகின்றன.
 
நன்றி வீரகேசரி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்