Paristamil Navigation Paristamil advert login

துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு உதவும் சமூக ஊடகங்கள்

 துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு உதவும் சமூக ஊடகங்கள்

10 மாசி 2023 வெள்ளி 10:36 | பார்வைகள் : 4352


 
பெப்ரவரி 6 ஆம் திகதி துருக்கி சிரியாவில் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தை தொடர்ந்து இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள் தங்களை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்க தொடங்கினார்கள்.
 
இந்த வட்ஸ்அப் செய்தியை யார் பார்த்தாலும் தயவு செய்து உதவுங்கள் என இடிபாடுகளிற்குள் இருந்து பொரான் குபாட் ( 20)என்பவர் தனது கையடக்க தொலைபேசியில்  பதிவு செய்யப்பட்ட வீடியோவை  அனுப்பினார்.
 
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் சிக்குண்டுள்ள தொடர்மாடியை வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார் இதன் காரணமாக மீட்பு பணியாளர்களால் அவர்களை மீட்க முடிந்தது. கார்டியன் இந்த தகவலைவெளியிட்டுள்ளது.
 
இன்னுமொரு வீடியோவில் சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தவர்கள் மற்றும் அயலவர்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கின்றான்.
 
நான் உயிருடன் தப்புவேனா அல்லது இறப்பேனா என்பது தெரியாது என நடுங்கும் குரலில் அவன் தெரிவிக்கின்றான்.
 
புழுதி காரணமாக அவனதுமுகமும் தலையும் வெள்ளைநிறத்தில் காணப்படுகின்றது இந்த இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள ஒருவரின் உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியாது என சிறுவன் தெரிவிக்கின்றான்.
 
இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் உதவிகோரும் ஆயிரக்கணக்கான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
 
இவர்களில் சிலர் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
பேரழிவில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான உதவிவழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து சிலர் சமூக ஊடகங்களில்  விமர்சனங்களை முன்வைத்துள்ள போதிலும் ஏனையவர்கள்  மக்களை அணிதிரட்டி மீட்பு மற்றும் நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு  சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.
 
உள்ளுர் மக்கள் அரசாங்கத்தின் உதவிகளிற்காகவோ அல்லது மனிதாபிமான அமைப்புகளின் உதவிகளிற்காகவோ காத்திருக்கவில்லை மாறாக என தெரிவிக்கின்றார் பேராசிரியர் டானியல் அல்டிரிச்.
 
சமூக ஊடகங்களில் அவர்கள் இங்கு உணவு கிடைக்கும் மருத்துவ உதவி இங்கு கிடைக்கும் என்ற தகவல்களை வெளியிடுகின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
வீடுகளை இழந்தவர்களிற்கு மக்கள் தங்குமிடங்களை வழங்குவதை பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
அஹ்பப் டெமேஜி என்ற அரசசார்பற்ற அமைப்பு மக்கள் தங்குவதற்கு இலவசமாக இடமளிக்கும் அமைப்புகள் குறித்த விபரங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
 
ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும்  பேரழிவு நிவாரண நடவடிக்கைகளை முற்றாக மாற்றியுள்ள ஜனநாயக மயப்படுத்தியுள்ளன என பேராசிரியர் அல்டிரிச்  ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
 
பலநூறுவருடங்களாக பேரழிவு முகாமைத்துவம் ஒருவழி நடவடிக்கையாக காணப்பட்டது மேலிருந்து கீழாக  அறிவிப்புகள் வெளியிடப்பட்டன - நிவாரண குழுக்கள் மீட்புகுழுக்கள் மனிதாபிமான உதவிகள் அரசாங்கத்திடமிருந்தே வந்தன அல்லது பொதுமக்கள் அவசரசேவைகளை தொடர்புகொண்டு உதவி கோரினார்கள் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
 
சமூக ஊடகங்கள் அதனை தலைகீழாக மாற்றியுள்ளன என அவர் குறிப்பிடுகின்றார்.
 
தற்போது சமூக ஊடகங்கள் காரணமாக மக்கள் உதவி தேவைப்படுபவர்களிடமிருந்து உடனுக்குடன் தகவல்களை பெறமுடிகின்றது அல்லது மக்கள் தங்களிற்கு உதவிதேவை என அறிவிக்க முடிகின்றது மக்களால் இயற்கை அனர்த்தத்தின் போது தங்களிற்கு உதவி தேவை என அறிவிக்க முடிகின்றது.
 
நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்