எகிப்தில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்- 13 பேர் பலி
.jpg)
19 ஆடி 2023 புதன் 05:43 | பார்வைகள் : 18770
எகிப்தின் மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள ஃபதாயக் எல்கோபா என்ற இடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக காணப்படுகின்றது.
இங்கு ஏராளமான பழமையான வீடுகள் உள்ள நிலையில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணியாளர்கள் தேடி வருகின்றனர்.
தரைத்தளத்தில் வசித்து வந்த ஒருவர் பராமரிப்பு பணியின் போது பல்வேறு அஸ்திவாரங்கள் மற்றும் சுவர்களை அகற்றியதால் இந்த விபத்து நேரிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3