8 மணிக்கு மேல் வேலை செய்ய தடை விதித்த பிரபல நிறுவனம்...
19 ஆடி 2023 புதன் 06:00 | பார்வைகள் : 7943
உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று ஜப்பான்.
ஜப்பானிய அரசாங்கமானது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இப்போது ஜப்பானிய பொது வர்த்தக நிறுவனமான இடோச்சு கார்ப்பரேஷன் (Itochu Corp) பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு விசித்திரமான முடிவை எடுத்துள்ளது.
அதன்படி இரவு 8 மணிக்கு மேல் ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க முடியாது.
எட்டு மணிக்குப் பிறகு அலுவலகக் கட்டிடம் பாதுகாவலர்களால் சோதனை செய்யப்பட்டு அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
வேலை முடியாவிட்டால் மறுநாள் சீக்கிரமாக வந்து முடித்துவிடலாம்.
கூடுதல் ஊதியமும் கிடைக்கும் என அறிவித்து இருக்கின்றது.
Masahiro Okafuji 2010-ல் நிறுவனத்தின் CEO-ஆக பொறுப்பேற்றார்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் அறிமுகப்படுத்திய திட்டங்களில் இரவு நேர வேலையைத் தடை செய்வதும் ஆகும்.
பிறப்பு விகிதம் குறைவதற்கு ஜப்பானில் வேலை நேரம் முக்கிய காரணியாக உள்ளது. குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டிய தேவையும் மக்கள்தொகை வீழ்ச்சிக்கு பங்களித்தது.
இந்த நேரத்தில்தான் இடோச்சு நிறுவனத்தின் மக்கள் தொகை இரட்டிப்பாகியது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகும், நிறுவனம் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது.
பின்னர், நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களின் வேலை நேரம் இரவு 8 மணியில் இருந்து மாலை 6 மணியாக குறைக்கப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
தற்போது நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.