Paristamil Navigation Paristamil advert login

சிம்பன்சியுடன் காதல் கொண்ட பெண்ணுக்கு பூங்காவிற்கு செல்ல தடை

சிம்பன்சியுடன் காதல் கொண்ட பெண்ணுக்கு  பூங்காவிற்கு செல்ல தடை

19 ஆடி 2023 புதன் 06:35 | பார்வைகள் : 6856


பெல்ஜியம் ஆண்டர்வெர்ப் உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பன்சி மீது பெண் ஒருவர் காதல் கொண்டுள்ளார்.

அதனை அடுத்து அவரை பூங்காவிற்கு நுழைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஆனால் தற்போது ஒரு நிபந்தனையின் பேரில் அந்த பெண் மீண்டும் பூங்காவிற்குள் அனுமதி அளித்துள்ளது.

2021ம் ஆண்டில், பெல்ஜியம் ஆண்டர்வெர்ப் உயிரியல் பூங்காவிற்கு(Antwerp Zoo) அடில் டிம்மர்மன்ஸ் (Adie Timmermans) என்ற பெண் ஒருவரின் அடிக்கடி வருகை மிகப்பெரிய வைரலானது.

அதற்கு முக்கிய காரணம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பூங்காவில் உள்ள சீட்டா(Chita) என்ற மனித குரங்குடன் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டது தான்.

சீட்டா மற்றும் அடில் டிம்மர்மன்ஸ் இடையிலான ஒவ்வொரு வார சந்திப்பின் போதும், இருவரும் கண்ணாடிகளுக்கு இடையே முத்தங்களை பகிர்ந்து கொண்டு, கட்டி அணைத்து கொண்டு பாசங்களை அதிகமாக பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர்.

இதனை கவனித்த உயிரியல் பூங்கா நிர்வாகிகள், அடில் டிம்மர்மன்ஸின் செயலால், சீட்டாவின் சமூக வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட தொடங்கிவிட்டது.

அடில் டிம்மர்மன்ஸ் சீட்டாவுடன் அதிக நேரம் செலவிட தொடங்கியதை பிறகு மற்ற சிம்பன்சிகளுடன் சீட்டா அவ்வளவாக ஒன்று சேர்வது இல்லை.

இது அவற்றின் விலங்கு குணத்தை பாதிக்கிறது என தெரிவித்து அடில் டிம்மர்மன்ஸ் ஆண்டர்வெர்ப் உயிரியல் பூங்காவிற்கு நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடர்பாக பேசிய அடில் டிம்மர்மன்ஸ்,சீட்டாவை நான் விரும்புகிறேன், அதுவும் என்னை விரும்புகிறது, எனக்கு வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. அவர்கள் ஏன் அதை என்னிடம் இருந்து பிரிக்க விரும்புகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னையும் சீட்டாவையும் அவர்கள் பார்க்க அனுமதிக்காவிட்டால் நாங்கள் இருவரும் கலக்கமடைவோம் என அடில் டிம்மர்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் அடில் டிம்மர்மன்ஸுக்கு முக்கிய நிபந்தனையின் பேரில் பூங்காவிற்கு நுழையவும், சீட்டாவை சந்திக்கவும் பூங்கா நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த முக்கிய நிபந்தனை என்னவென்றால், குறிப்பிட்ட விலங்கின் மீது அடில் டிம்மர்மன்ஸின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வது மட்டும் தான்.

நாங்கள் அடில் டிம்மர்மன்ஸ்-யிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், சீட்டா சிம்பன்சிகளில் ஒரு சிம்பன்சியாக இருக்கட்டும், அதிக நேரம் சீட்டாவுடன் அவர் நேரம் செலவழிக்கவோ, அதன் கவனத்தை ஈர்க்கவோ வேண்டாம் என்பது மட்டும் தான் என்று பூங்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்