யாழில் இரத்த வெள்ளத்தில் சடலம் மீட்கப்பட்ட இளைஞன்
19 ஆடி 2023 புதன் 06:43 | பார்வைகள் : 10806
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கொக்குவில் தெற்கு தாவடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் என்ற 25 வயதுடையவராகும்.
குறித்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்திற்கு அருகில் போதை ஊசி, தேசிக்காய், பியர் ரின், பீடி, போன்றவை காணப்பட்டுள்ளது.
போதே ஊசி ஏற்றுபவர்கள் தேசிக்காய் பாவிப்பதாக தெரிய வந்துள்ள நிலையில் குறித்த இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan