Paristamil Navigation Paristamil advert login

மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்

 மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்

20 ஆடி 2023 வியாழன் 08:45 | பார்வைகள் : 5869


பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டப்பட்டார்.

அவர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.

இதனிடையே சார்லஸ் மன்னரானதை தொடர்ந்து, அந்த நாட்டின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை மன்னரை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த வகையில் பிரித்தானியாவில் இதுவரை 'அவளது மாட்சிமை' என்ற பட்டத்துடன் ராணி இரண்டாம் எலிசபெத் பெயரை தாங்கி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு 'அவரது மாட்சிமை' என்ற பட்டத்துடன் மன்னர் மூன்றாம் சார்லஸின் பெயரை தாங்கி புதிய கடவுச்சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்புடன் தயாரான கடவுச்சீட்டுகளை பிரித்தானியாவின் உள்துறை மந்திரி சுயெல்லா பிரேவர்மேன் வெளியிட்டார்.

பிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கடவுச்சீட்டில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்