Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் கடும் வெப்பம் - சுற்றுலா பயணிகளும் பெரும் இன்னல்

இத்தாலியில் கடும் வெப்பம் -  சுற்றுலா பயணிகளும் பெரும் இன்னல்

21 ஆடி 2023 வெள்ளி 03:48 | பார்வைகள் : 21992


இத்தாலியில் தற்போது 46 டிகிரியில் அதீத வெப்ப அலை வீசுகிறது.

இத்தாலியில் வெயிலின் தாக்கத்தால் தலைநகர் ரோமில் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தலைநகர் ரோமில் வீசி வரும் அனல் காற்று காரணமாக அந்நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் கையில் குடையுனும், தலையில் தொப்பியுடனும் சுற்றி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் அங்கு தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக ரோம் நகரில் குடிநீர் பெத்தலகளின் விலை அதிகரித்துள்ளது.

ரோம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்களில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்