Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் நடைபாதையில் சடலமாக கிடந்த பெண்..! அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானியாவில் நடைபாதையில் சடலமாக கிடந்த பெண்..! அதிர்ச்சி சம்பவம்

21 ஆடி 2023 வெள்ளி 03:56 | பார்வைகள் : 4744


பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில்  நடைபாதையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இறந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது பெயர் கெர்ரி நியூமன் (40) என்றும், இரண்டு குழந்தைகளின் தாய் என்றும் தெரிய வந்தது.

மேலும் துப்பறியும் நிபுணர்களும் விசாரணையில் பொலிஸாருடன் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆண் ஒருவரும், 52 வயது பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் கெர்ரியின் உடல் பிரீஹோல்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கெர்ரியின் உடல் கைப்பற்றப்பட்டபோது அந்த பாதையை பொலிஸார் மூடினர்.

துப்பறியும் தலைமை ஆய்வாளர் ரேச்சல் ஸ்மித் கூறுகையில், 'மீண்டும், இந்த கடினமான நேரத்தில் கெர்ரியின் அன்புக்குரியவர்களுக்கு எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான அனுதாபங்கள்.

இந்த விசாரணை தொடரும் நிலையில் எங்கள் அதிகாரிகளும், சிறப்பு அதிகாரிகளும் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

மேலும் கெர்ரிக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

அவரது துயர மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்