Paristamil Navigation Paristamil advert login

தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறதா Google!

தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறதா Google!

22 மார்கழி 2022 வியாழன் 13:02 | பார்வைகள் : 7332


பிரெஞ்சு ஓவியக் கலைஞர் ஆல்பெர்ட்டின் மோனியர் (Albertine Meunier) தமது இணையத் தேடல்கள் அனைத்தையும் Google சேகரித்திருப்பதைக் கண்டுபிடித்தார்... ஒரு முடிவெடுத்தார். 
 
2006ஆம் ஆண்டில் Google அவரது தேடல்களைச் சேகரிக்கிறது என்பதை மோனியர் கண்டறிந்தார். 
 
அபோது முதல் இடம்பெற்ற தமது Google தேடல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு  மூன்று பாகப் புத்தகங்களாய் வெளியிட்டிருக்கிறார். 
 
இதற்கு என்ன காரணம்?
 
தனிநபர்களைப் பற்றிய தகவல்களை Google போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்படிச் சேகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்த விரும்புகிறார் அவர். 
 
அனைவரும் தங்கள் தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டுவிட்டால், Google போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனீட்டாளர்களின் தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்று லாபம் ஈட்டுவது  கடினமாகும் என்பதை உணர்த்துவதே தமது நோக்கம் என்கிறார் மோனியர். 
 
தேடல்களைப் புத்தகமாக வெளியிடக் காரணம்?
 
"நான் Googleஇல் தேடியதைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இல்லை - உண்மைதான். அனைவரது வாழ்க்கையும் சுவாரஸ்யமற்றது தானே"
 
என்று வேடிக்கையாகக் கூறுகிறார் இவர். 
 
வெளிப்படைப் போக்கை நாமே தொடங்கிவிட்டால், ரகசியத் தகவலுக்கான சுவாரஸ்யமும் தேவையும் குறைந்துவிடும் என்பது இவரது வாதம். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்