WhatsApp இல் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள்!
22 கார்த்திகை 2022 செவ்வாய் 16:39 | பார்வைகள் : 7310
WhatsApp இல் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளைப் பற்றிய தகவல்களை நேற்று வெளியிட்டிருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க். அதன்படி வாட்ஸ்அப் குரூப் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக கம்யூனிட்டி என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. WhatsApp குழு அழைப்பு வசதியும் இந்த அப்டேட் மூலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
WhatsApp குரூப்பைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் 256 பேர் மட்டுமே சேர முடியும் என்று இருந்தது. பின்னர் கடந்த மார்ச் மாதம் அந்த எண்ணிக்கையை 512 -ஆக அதிகரித்தது வாட்ஸ்அப். தற்போதைய அப்டேட் மூலமாக அது 1024 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இப்போது சேர்க்கப்பட்டுள்ள கம்யூனிட்டி என்ற வசதியின் மூலமாக பல்வேறு குரூப்களை ஒரே கம்யூனிட்டி என்ற ஆப்ஷனுக்கு கீழ் கொண்டு வர முடியும்.
இதன் மூலமாக ஒரு செய்தியை பல்வேறு குரூப்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் பல்வேறு குரூப்களை ஒருங்கிணைக்கவும் முடியும். குரூப் வீடியோ காலில் இனிமேல் 32 பேர் வரை இணைந்து பேசிக் கொள்ளலாம். குரூப்களில் இருப்பவர்களின் கருத்துகளை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வாக்களிக்கும் ( Poll ) வசதியும் வாட்ஸ்அப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.