Paristamil Navigation Paristamil advert login

முகநூலில் உளவு பார்ப்பவர்களை தடுப்பது எப்படி?

முகநூலில் உளவு பார்ப்பவர்களை தடுப்பது எப்படி?

26 பங்குனி 2022 சனி 12:26 | பார்வைகள் : 12462


Facebook கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பேஸ்புக் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அதில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புரோஃபைல் பாதுகாப்பு என்பது அவசியம்.  முறையாக பயன்படுத்தாவிட்டால் ஹேக்கர்கள் மற்றும் வேண்டாவதர்களிடம் உங்களின் தகவல்கள் சென்று சேர்ந்துவிடும். 

 
அதனை நீங்கள் தடுக்க விரும்புபவர்களுக்கு புரோஃபைல் லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் கொடுக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது, உபயோகிப்பது? என தெரியாதவர்களுக்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 
 
Facebook Profile Lock என்றால் என்ன?
 
Facebook Profile Lock ஆப்சன் மூலம், உங்கள் கணக்கையும் சுயவிவரப் புகைப்படத்தையும் லாக் செய்து வைக்கலாம். இந்த அம்சத்தின் மூலம், உங்கள் புரோஃபைல் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் நண்பர் பட்டியலில் இல்லாதவர்கள் உங்கள் புரோஃபைலைப் பார்க்க முடியாது.  இதுதவிர ஏனைய தகவல்களும் மற்றவர்கள் பெற முடியாது. 
 
நன்மைகள் என்ன?
 
உங்கள் தனிப்பட்ட டேட்டாவானது Facebook Profile Lock அம்சத்துடன் பாதுகாக்கப்படும். உங்கள் புகைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் யாராலும் திருட முடியாது. தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தொடர்பு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
 
எப்படி லாக் செய்வது?
 
* முதலில் உங்கள் Facebook பயன்பாட்டிற்குச் சென்று உங்கள் புரோபைலுக்கு செல்ல வேண்டும்
 
* பின்னர் 'புரோபைல் சேஞ்ச்' விருப்பத்திற்கு அடுத்துள்ள மூன்று-புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்
 
* இப்போது, ​​லாக் ப்ரொஃபைல் ஆப்ஷனைப் தேர்ந்தெடுத்து அதனுள் செல்லவும்
 
* அதன் பிறகு, Facebook Profile Lock அம்சத்தின் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு காண்பிக்கபடும். 
 
* கடைசியாக, உங்கள் கணக்கை லாக் செய்வதற்கு 'உங்கள் புரோஃபைலை லாக் செய்க' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்