Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு பஜ்ஜி

உருளைக்கிழங்கு பஜ்ஜி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10329


 உருளைக்கிழங்கு உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை பெரியவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதை பெரியோர்கள் அதிகம் சாப்பிட்டால், உடலில் வாயுத் தொல்லை ஏற்படும். ஆகவே பெரியோர்கள் இதனை அளவாக சாப்பிட வேண்டும். மேலும் உருளைக்கிழங்கை வைத்து நிறைய ெய்யலாம். அதிலும் மாலை வேளை என்றால் அனைவருக்கும் பஜ்ஜி தான் ஞாபகம் வரும். எனவே உருளைக்கிழங்கை வைத்து ஒரு ஈஸியான முறையில் எப்படி பஜ்ஜி செய்வதென்று பார்ப்போமா!!! 


தேவையான பொருட்கள்: 
 
உருளைக்கிழங்கு - 2 
கடலை மாவு - 3/4 கப் 
அரிசி மாவு - 1/4 கப் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் 
கேசரிப் பவுடர் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை: 
 
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பேக்கிங் சோடா, இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரிப் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை மாவில் நனைத்து, எண்ணெயின் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்