Paristamil Navigation Paristamil advert login

இட்லி பொடி சாதம்

இட்லி பொடி சாதம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10341


 பொதுவாக காலை நேரத்தில் சாப்பாடு செய்து, பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பினால், சில குழந்தைகள் அதை சரியாக சாப்பிடாமல் வருவார்கள். ஏனெனில் சாப்பாடு விரைவில் வறண்டுவிடும். எனவே பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், ஏதேனும் ஒரு கலவை சாதத்தை செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சுவைத்து சாப்பிடும் போது, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதற்கு கலவை சாதங்களில் ஒன்றான இட்லிப் பொடி சாதத்தை செய்வது மிகவும் சுலபமானது. அதன் செய்முறைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்

 

சாதம் - 2 கப்

இட்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 

முதலில் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

பின்பு அதனை சாதத்தில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, இட்லிப் பொடி மற்றும் உப்பு போட்டு மீண்டும் கிளற வேண்டும். இப்போது சுவையான இட்லிப் பொடி சாதம் ரெடி!!!

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்