டிக்டாக் செயலியை நீக்குமாறு அமேசான் அறிவுறுத்தல்
11 ஆடி 2020 சனி 10:37 | பார்வைகள் : 8844
டிக்டாக் செயலியில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என அமேஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ஊழியர்களுக்கு அந்நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், டிக்டாக் வீடியோ பகிர்வு பயன்பாட்டை தங்கள் மொபைல் சாதனங்களிலிருந்து அகற்றுமாறு ஊழியர்களைக் கோரியுள்ளது.
தங்களது நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும் மொபைல் போன்களில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அமேசான், அவ்வாறு இருந்தால் அதனை உடனே நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் லேப்டாப்பில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் அமேஸான் நிறுவனம் கூறியுள்ளது.