Paristamil Navigation Paristamil advert login

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் புரோ மற்றும் வாட்ச் 2 லைட் சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் புரோ மற்றும் வாட்ச் 2 லைட் சிறப்பம்சங்கள்

6 கார்த்திகை 2021 சனி 05:01 | பார்வைகள் : 9623


சீன நிறுவனமான ரெட்மி ‘ஸ்மார்ட் பேண்ட் புரோ’ மற்றும் ‘வாட்ச் 2 லைட்’ என இரண்டு ஸ்மார்ட் டிவைஸ்களின் சிறப்பம்சங்கள் வெளியாகி உள்ளன. ரெட்மி ஸ்மார்ட் பேண்டின் அப்கிரேடட் வெர்ஷனாக ஸ்மார்ட் பேண்ட் புரோ அறிமுகமாகி உள்ளது. இந்த இரண்டு டிவைஸ்களின் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம். 

 
1.47 இன்ச் AMOLED டிஸ்பிளே, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆட்டோமெட்டிக் லைட் அட்ஜெஸ்மெண்ட் சென்சார், 282 பிக்ஸல் ரெசலுஷன், 50 மீட்டர் ஆழம் 10 நிமிடம் வரை இந்த வாட்ச் நீரில் மூழ்கினாலும் சேதராம் ஏதும் இல்லாத வாட்டர் ரெசிஸ்டண்ட், சிலிகான் ஸ்ட்ரேப், 2.5D டெம்பர் கிளாஸ் டிஸ்பிளேவை புரொடக்ட் செய்கிறது. 110 வொர்க் அவுட் மோட்களை இதைக் கொண்டு டிரேக் செய்யலாம். 200mAh பேட்டரி, 14 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் வசதி மாதிரியானவை இதில் உள்ளன. 
 
1.55 இன்ச் LCD ஸ்க்ரீன், 262mAh பேட்டரி மற்றும் நீலம் - கருப்பு - தங்க நிறம் என மூன்று வண்ணங்களில் இந்த வாட்ச் கிடைக்கிறது. சென்சார் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் மாதிரியானவை அப்படியே ஸ்மார்ட் பேண்ட் புரோவை COPY செய்துள்ளனர். 
 
இருப்பினும் இந்த இரண்டு டிவைஸ்களும் எப்போது அறிமுகமாகிறது மற்றும் விலை குறித்த விவரங்கள் எதையும் ரெட்மி அறிவிக்காமல் உள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்